Pathu Thala: சிம்புவிற்கு ரசிகர்கள் கொடுத்த லைவ் கமெண்ட்ஸ்... இது Spoiler Alert ஏரியா!

சென்னை: சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சிம்பு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கு இது திருப்தியளிக்கவில்லை என்றே தெரிகிறது.

பத்து தல படத்தை தியேட்டரில் பார்த்த சிம்புவின் ரசிகர்கள் கொடுத்த லைவ் கமெண்ட்ஸ் என்னவென்பதை இப்போது பார்க்கலாம்.

 வெளியானது பத்து தல

வெளியானது பத்து தல

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்புவின் பத்து தல இன்று வெளியானது. கன்னடத்தில் வெற்றிப் பெற்ற முஃப்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக இயக்குநர் கிருஷ்ணா கூறியிருந்தார். ஆனால், படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள், அந்த மாற்றம் எது என இயக்குநர் கிருஷ்ணாவை கேட்டு வருகின்றனர். வழக்கமாக எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவரது படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களிடம் இருந்து வெறித்தனமான கமெண்ட்ஸ்கள் வரும். அந்த வரிசையில் பத்து தல படமும் சிம்புவும் மிஸ் ஆகவே இல்லை.

 சடுகுடு ஆடும் திரைக்கதை

சடுகுடு ஆடும் திரைக்கதை

முதல் காட்சியில் முதலமைச்சர் கடத்தல், கெளதம் மேனன் மீது சந்தேகம், கலையரசன் தற்கொலை, கெளதம் கார்த்திக் என்ட்ரி என திரைக்கதையே சடுகுடு மோடில் பயணிக்கிறது. இதில் சில காட்சிகள் விசாகப்பட்டிணத்தில் எடுத்திருப்பதால் தெலுங்கில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் "படமே கன்னடத்துல இருந்து தமிழ்ல ரீமேக் பண்ணிருக்கீங்க... இது போதாதுன்னு தெலுங்குல வேற பேசி ஒன்னுமே புரியலப்பா" என ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர்.

 இது எந்த ஊரு பாஷை?

இது எந்த ஊரு பாஷை?

பத்து தல படத்தில் சிம்பு கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த கேங்ஸ்டராக வருகிறார். இதனால், சிம்பு, கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் எல்லோரும் நேட்டிவிட்டியாக இருக்க வேண்டும் என கன்னியாகுமரி, நாகர்கோவில் வட்டார வழக்கில் பேச முயற்சி செய்துள்ளனர். ஆனால், அது சுத்தமாக ஒர்க் அவுட் ஆகாமல் போக, தியேட்டரிலேயே ரசிகர்கள் செம்மையாக ட்ரோல் செய்து கலாய்த்துவிட்டனர்.

 எங்களையும் அழ வைக்காதீங்க சிம்பு

எங்களையும் அழ வைக்காதீங்க சிம்பு

அதேபோல், முதல் பாதியில் இடைவேளை வரும் போது தான் சிம்பு என்ட்ரி கொடுக்கிறார். இரண்டாம் பாதியில் வேற லெவலில் மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ஒரு காட்சியில் சிம்புவின் உண்மையான குணம் தெரிந்து அந்த ஊர் மக்களே நேரில் சென்று அவருக்கு நன்றி கூறுவார்கள். அப்போது ஒரு பாட்டி உருக்கமாக பேசும் காட்சியில், 'என்ன அழ வைக்காதீங்க' என சிம்பு பதில் சொல்வார். கிரிஞ்சான அந்த எமோஷனல் காட்சியைப் பார்த்து, தயவுசெஞ்சு 'எங்களை அழ வச்சிடாதீங்க சிம்பு' என ரசிகர்களே கூச்சலிடும் அளவிற்கு போய்விட்டது.

 நல்லது பண்ண கெட்ட முகம்

நல்லது பண்ண கெட்ட முகம்

பத்து தல படத்தில் மீண்டும் பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு. முக்கியமாக "இங்க நல்லது செய்றதுக்கு கூட கெட்ட முகம் தான் தேவைப்படுது" என சிம்பு அடிக்கடி பஞ்ச் அடிக்கிறார். அப்போது ஒரு ரசிகர் 'சிம்புண்ணா எப்போண்ணா அந்த கெட்ட முகத்த காட்டுவ" என கமெண்ட் அடித்தார். மேலும் சிம்பு அடிக்கடி ஹெலிகாப்டரில் பறக்கும் காட்சிகளையும் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தனர். படத்தில் தனியாக காமெடி ட்ராக் இல்லையென்றாலும், சிம்புவை வைத்து ரசிகர்கள் அதனை தீர்த்துக்கொண்டனர்.

 பத்து தல ஸ்பாய்லர் அலர்ட்

பத்து தல ஸ்பாய்லர் அலர்ட்

சினிமாவில் ஹீரோ கேங்ஸ்டராக நடித்தால், அவருக்கு மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்வது தானே வழக்கம். ஏஜிஆரும் அப்படி மக்களுக்கு உதவி செய்கிறார் என தெரிந்ததும், கெளதம் கார்த்திக் சிம்புவுடன் சேர்ந்துவிடுகிறார். முக்கியமாக மக்களுக்கு துரோகம் செய்ய நினைத்தது தனது தங்கையின் கணவர், முதலமைச்சர் என எப்படியிருந்தாலும் அவனை போட்டுத்தள்ளும் கேங்ஸ்டர் தான் இந்த ஏஜிஆர் என பாடமெடுத்துள்ளார் சிம்பு. இந்த உண்மையெல்லாம் தெரிந்தும் போலீஸாரால் கைது செய்ய முடியாமல் மீண்டும் ஹெலிகாப்டரில் பறப்பது தான் பத்து தல க்ளைமேக்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X