என் வீட்ட வித்தாவது FDFS க்கு ஹெலிகாப்டர்ல வருவேன்.. கூல் சுரேஷின் அலப்பறை பேச்சு!
சென்னை : சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூல் சுரேஷ் பேசியது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இதில், சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 30ந் தேதி தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பத்து தல
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ள இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டாராக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சிம்பு தான் என் மூச்சு
பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது இதில் பேசிய கூல் சுரேஷ், சிம்புக்கு மட்டுமே ஏன் சப்போர்ட் பண்றீங்க என்று பலர் என்னிடம் கேட்டனர். நான் சிம்புவை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, நான் அவருடைய தீவிர ரசிகன். சிம்பு தான் என மூச்சு, சிம்பு தான் என் பேச்சு, சிம்பு தான் என் வாட்ச், வாட்ச் எப்படி சுற்றிக்கொண்டே இருக்குமோ அப்படித்தான் நான் அவர் பின்னால் சுற்றிக் கொண்டே இருப்பேன்.

சிம்பு எப்போதுமே மாஸ்
எனக்கே தெரியாமல் நான் சந்திரமுகியாக மாறிவிடுகிறேன். அவர் மீது நான் வைத்திருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் இப்படி வெளிப்படுத்துகிறேன் என்றார். எனக்கு மட்டும் இல்லை பல நடிகர்களுக்கும் சிம்புவை பிடிக்கும், சிம்பு எப்போதுமே மாஸ் தான்.

ஹெலிகாப்டரில் வருவேன்
பொன்னியின் செல்வன் படம் பார்க்க குதிரையில் வந்ததுபோல, பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டரில் வரும் ஐடியாவில் இருக்கிறேன். இதற்காக என் வீட்டை வித்தாவது ஹெலிகாப்டரில் வந்து பூ தூசுவேன். கோவில் கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யும் போது எப்படி ஹெலிகாப்டரில் வருகிறார்களோ. அப்படி என் தலைவன் எஸ்.டிஆரை கீழே இருந்து பார்ப்பதைவிட அனைவரும் அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றார். அதற்காக அனுமதி வாங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூல் சுரேஷ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











