பத்து தல, விடுதலை, தசரா… இந்த வாரம் வசூலை அள்ள போகும் படம் எது?
சென்னை : இந்த வாரம் சினிமா பிரியர்களுக்கு சரியான வேட்டை காத்திருக்கிறது. சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை, நானியின் தசரா படங்கள் வெளியாக உள்ளதால், படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
வெற்றி மாறனின் அசுரன் படத்திற்கு பிறகு விடுதலை படம் வெளியாக உள்ளதால், இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர்.
இரண்டு பெரியப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால், இதில் இந்த வாரம் எந்த படம் வசூலை அள்ளப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பத்து தல
சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள 'பத்துதல'படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் எனும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்

விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள 'விடுதலை' திரைப்படம் இந்த மாத இறுதியில் மார்ச் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகமாக உள்ள இப்படத்தை இன்போடைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.

தசரா (தமிழ்,தெலுங்கு)
தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள தசரா படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது.

Aazam (இந்தி)
பாலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஷ்ரவன் திவாரி இயக்கி உள்ள படம் ஆசம். இந்தி திரைப்படமான இப்படத்தில் ஜிம்மி ஷெர்கில், அபிமன்யு சிங் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படம் இது மும்பை பாதாள உலகத்தின் மாஃபியா கதைக்களத்தை கொண்ட கதையாக உள்ளது. இப்படம் வரும் மார்ச் 31ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Gurudev Hoysala (கன்னடம்)
இயக்குநர் என் விஜயன் இயக்கத்தில், தனஞ்சய், அம்ருதா ஐயங்கார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'குருதேவ் ஹொய்சாலா'. இப்படத்தில் தனஞ்சயா மிகவும் திறமைவாய்ந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தனஞ்சயவின் மாபெரும் வெற்றியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படம் மார்ச் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











