துரோகமும் துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன? சிம்புவின் வெறித்தனமான பத்து தல ட்ரெய்லர் ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்ய புத்திரன், டிஜே அருணாச்சலம் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் பாணியில் துப்பாக்கிகள் தோட்டாக்கள் தெறிக்க சிம்புவின் கம்பீரமான நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல ட்ரெய்லர் ரசிகர்களை கண்டிப்பாக தியேட்டரை நோக்கி அழைத்து வரும் என்பதை கன்ஃபார்ம் செய்துள்ளது.

நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செய்து அசத்தி இருக்கிறார்.

பத்து தல ட்ரெய்லர்

பத்து தல ட்ரெய்லர்

பத்து தல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், ஷார்ப்பா 10 மணிக்கு யூடியூபில் பத்து தல ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளனர். கன்னடத்தில் மஃப்டி எனும் பெயரில் வெளியான இந்த படம் தமிழில் பத்து தல என்கிற பெயரில் உருவாகி உள்ளது.

தமிழ்நாடு சிஎம்மை காணல

தமிழ்நாடு சிஎம்மை காணல

பத்து தல படத்தின் ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு சிஎம்மை காணவில்லை என்கிற வசனத்துடன் ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. கவுதம் மேனன் அரசியல்வாதியாக மணல் கொள்ளை மாஃபியாவான ஏஜிஆரை காலி செய்ய முயற்சித்து வருவதும் ஏஜிஆராக சிம்பு அதகளம் செய்யும் காட்சிகள் எல்லாம் ட்ரெய்லரில் மிரட்டுகின்றன.

சிங்கத்த கொல்ல

சிங்கத்த கொல்ல

மானை சிறுத்தை கொல்லும், சிறுத்தையை புலி கொல்லும் புலியை சிங்கம் கொல்லும் ஆனால், அந்த சிங்கத்தை கொல்ல வேற எந்தவொரு மிருகமும் பொறக்கலடா என ஏ.ஜி. ராவணனாக சிம்பு பேசும் மாஸ் பஞ்ச் வசனம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் எதிரிகளை அடித்து நொறுக்குவதில் தொடங்கி துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுத் தனமாக சுடுவது என மெர்சல் காட்டி உள்ளார் சிம்பு.

துரோகம் புதுசா என்ன

ஏஜிஆருக்கு துரோகமும் துரோகியும் புதுசா என்ன என கிளைமேக்ஸில் சிம்பு பேசும் வசனம் உள்ளிட்டவை ட்ரெய்லரில் கெத்துக் காட்டுகின்றன. கவுதம் கார்த்திக் அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக ஏஜிஆரை பிடிக்க முயற்சி செய்வதும், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 30ம் தேதி தியேட்டரில் பத்து தல படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X