பட்ற... இதுவும் ஒரு படத்தின் பெயர்தான்!
நச்சென்று உறைக்கும் உண்மையும் அதைச் சார்ந்த கடினமான சம்பவங்களும் எப்பொழுதும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.
'பட்ற' என்ற தலைப்பில் ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்தி குமார் தயாரிக்கும் புதிய படம், நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் வேறு வழியின்றி சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை.

மனித உருவில் வலம் வரும் மிருகங்கள் இடையே வாழும் ஒரு இளைஞன் விண்வெளி துறையில் சாதிக்க விரும்புகிறான். அவனது வானுயர்ந்த எண்ணங்கள் அவனது வாழ்வில் சந்திக்கும் சில சம்பவங்களால் கீழே விழுந்து நொறுங்கிப் போகிறது. அவன் இருந்து இருக்க கூடாத, ஆனால் இருந்து விட்ட ஒரு சூழ்நிலை அவனது வாழ்கையை புரட்டிப் போடுகிறது. சமூகத்தின் இரு பெரிய தூண்கள் இடையே அவன் ஒரு துரும்பாக நுழைந்து, எப்படி ஒரு ஆயுத கிடங்காக மாறி அவர்களை அழிக்கிறான் என்பதே ' பட்ற' படத்தின் கதை.

சமூகத்தின் அவலமான இரு பெரிய துருவங்களின் போர் எப்படி அப்பாவி மக்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அறிமுக இயக்குனர் ஜெயந்தன் மிகவும் துணிச்சலாக இதில் படமாக்கியுள்ளாராம்.
மிதுன் தேவ் என்பவர் நாயகனாகவும், வைதேகி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
விரைவில் வெளியாகவிருக்கிறது பட்ற!


Click it and Unblock the Notifications











