Patriot Box Office: கஷ்டப்படும் கர.. முதல் நாளில் 30 கோடி வசூலை தட்டித்தூக்கிய மம்மூட்டி, மோகன்லால் படம்!

சென்னை: தனுஷின் கர திரைப்படம் வெளியான 2 நாட்களில் 20 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மோகன்லால், மம்மூட்டி, நயன்தாரா, பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாளில் அதிகபட்சமாக 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளியான பேட்ரியாட் திரைப்படமும் கர படத்தை போல கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. நம்ம ஊர் வேட்டையன் படம் போல உள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்பித் தள்ளியுள்ளனர்.

Patriot Box Office Day 1 Worldwide Collection is a good start for Mammootty and Mohanlal collab
Photo Credit:

படத்துக்காக பெரிய புரமோஷனையும் படக்குழு செய்யாத போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும் முதல் நாள் மோகன்லால், மம்மூட்டியை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும், இருவரது பர்ஃபார்மன்ஸ் திருப்திப்படுத்தியது.

கர 2 நாள் உலக வசூல்: தனுஷின் கர திரைப்படம் மே 1ம் தேதி விடுமுறை நாள் என்பதால் முதல் நாளை விட சற்று கூடுதல் வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் உலகளவில் சுமார் 9 கோடி வசூல் ஈட்டிய கர திரைப்படம் 2 நாட்களில் 20.20 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு மேலும் 20 கோடி அதிகபட்சமாக அதிகரித்தால் 40 கோடி அளவுக்கு கர படத்தின் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தனுஷ் படத்துக்கு இது மிகவும் குறைவான வசூல் தான் என்கின்றனர்.

பேட்ரியாட் முதல் நாள் வசூல்: மம்மூட்டி, மோகன்லால், பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி இன்னும் பல பிரபலங்களின் கால்ஷீட் கிடைத்தும் இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்தை சொதப்பியது கேரள ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், முதல் நாள் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸ் நிரம்பியது. உலகளவில் முதல் நாளில் அதிகபட்சமாக 29.37 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகபட்சம் 100 கோடி வசூலையாவது இந்த படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகாவின் 300 கோடி வசூலை முறியடிப்பது கஷ்டம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X