அசுரனை மிஞ்சிய பட்டாஸ் முதல் நாள் வசூல்.. பொங்கல் தினத்தன்று வசூல் வேட்டையாடிய தனுஷ்!

Recommended Video

Pattas Public Review | | Pattasu Review | Dhanush | Sneha

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று திரைக்கு வந்தது.

தனுஷ் தந்தை, மகன் என டபுள் ரோலில் நடித்துள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், 'அடிமுறை' எனும் தமிழர்களின் பாரம்பரிய கலை குறித்து பிளாஷ்பேக்கில் வைத்து பாராட்டுக்களை அள்ளியுள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

நீண்ட நாள் கழித்து தனுஷ் மாஸ் கமர்ஷியல் படத்தில் நடித்து வசூல் வேட்டையாடி உள்ளார்.

உலகளவில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் முதல் நாள் வசூலாக 10 கோடி வரை ஈட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அசுரன் வசூல்

அசுரன் வசூல்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் படம் விடுமுறை நாளில் வெளியாகவில்லை. வெற்றிமாறன் - தனுஷ் காம்போவில் வெளியான அசுரன் படம் முதல் நாளில் 6.5 கோடி வசூல் ஈட்டியது.

அசுரனை மிஞ்சிய பட்டாஸ்

அசுரனை மிஞ்சிய பட்டாஸ்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சினேகா நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் அசுரன் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்து முதல் நாள் வசூலாக பத்து கோடி வரை ஈட்டியுள்ளது.

சென்னை வசூல்

சென்னை வசூல்

கொடி படத்திற்கு பிறகு தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் படம் சென்னையில் முதல் நாள் வசூலாக 1.5 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அசுரன் முதல் நாள் சென்னையில் 88 லட்சம் ரூபாய் வசூலையும், நம்ம வீட்டுப் பிள்ளை 58 லட்சம் ரூபாய் வசூலையும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல்

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல்

தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறையை பட்டாஸ் படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுத்து சொல்லி, பட்டி தொட்டிகள் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையான நேற்று வெளியான பட்டாஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி முதல் 9 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

உலகளவில் முதல் நாள் வசூல்

உலகளவில் முதல் நாள் வசூல்

பொங்கல் விடுமுறையை குறிவைத்து சோலோ ரிலீசாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இந்த வாரம் செம்ம கலெக்‌ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ள பட்டாஸ் திரைப்படம், இந்த வார இறுதியில் 30 முதல் 40 கோடி வரை ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

செம ட்ரீட்

செம ட்ரீட்

நடிகர் தனுஷ் 2020ல் அடுத்தடுத்து புதிய படங்களை இறக்க காத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் படு பிஸியாக நடித்து வருகிறார். அதற்கு அடுத்து ராட்சசன் இயக்குநர் படம் என இந்த ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X