பப்ஜி பசங்க கொண்டாட்டம்.. பட்டாஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சில் ப்ரோ’ ரிலீஸ்!

Recommended Video

Chill Bro Lyrical Video | Dhanush | Sathya Jothi Films | Pattas

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'Chill Bro' பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்திற்கு, விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சில் ப்ரோ பாடலில் இடம்பெற்றுள்ள வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் பாடல் பப்ஜி விளையாடும் பசங்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

சில் ப்ரோ

பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சில் ப்ரோ' தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், செம்ம எனர்ஜியுடன் இந்த பாடலை பாடியுள்ளார். பின்னி மில்லில் கலர்ஃபுல்லாக செட் போட்டு பாடலுக்கு நடனம் அமைக்கப்பட்டுள்ளது. தனுஷும், இளமையான லுக்கில் கலர் கலர் கண்ணாடிகளை போட்டு, கலக்கலாக நடனாமாடியுள்ளார். விவேக் - மெர்வின் இசையில் உருவாகியுள்ள சில் ப்ரோ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சும்மா கிழியை மிஞ்சுமா

சும்மா கிழியை மிஞ்சுமா

பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில் ப்ரோ, ரஜினியின் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழியை மிஞ்ச வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் போட்டி போட்டு, பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர். ரவுடி பேபி அளவுக்கு சில் ப்ரோவும் ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பப்ஜி பாட்டு

மொபைல் வீடியோ கேமான பப்ஜி விளையாட்டில் வரும் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என்ற வரிகளை பாடல் வரிகளாக மாற்றி தனுஷ் பாடியுள்ளார். இனி பப்ஜி விளையாடும் பசங்களுக்கு சில் ப்ரோ பாடல் பப்ஜி பாட்டாகவே மாறிவிடும் போல தெரிகிறது.

டான்ஸ் & வாய்ஸ்

20 வயது பையனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறார், 20 வயது பையனாகவும் நடித்து அசத்துகிறார் தனுஷ். தனுஷின் டான்ஸ் மற்றும் வாய்ஸ் சூப்பராக இருப்பதாக இந்த ரசிகர் லிரிக் வீடியோவை ஸ்நாப் ஷாட் எடுத்து கமெண்ட் செய்துள்ளார்.

தலைவன் என்ட்ரி

பட்டாஸ் ஓபனிங் பாடலான சில் ப்ரோ பாடலில் தனுஷின் என்ட்ரி குறித்து, தலைவன் என்ட்ரி தீயாக இருக்கிறது என எமோஜிகளை தெறிக்கவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

பட்டாஸ் வெடிக்க ஆரம்பிச்சாச்சு

தலைவா சில் ப்ரோ செம்மயா இருக்கு, பட்டாஸ் வெடிக்க ஆரம்பிச்சாச்சு தலைவா என இந்த ரசிகர் தனது கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்.

செம்ம பட்டாஸா இருக்கு

தனுஷின் பட்டாஸ் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத், செம்ம பட்டாஸா இருக்கு என ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: pattas பட்டாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X