Just In
- 57 min ago
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- 1 hr ago
சட்டையை இப்படியும் பட்டன் போடாமல் போடலாம்.. இன்னிக்கு இவங்க தான் இன்ஸ்டா டிரெண்ட்!
- 1 hr ago
டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
- 2 hrs ago
ரஜினி வில்லனுக்கு குறும்பு மனசு.. மனைவிக்கு எவ்ளோ காஸ்ட்லியான தோடு வாங்கிக் கொடுத்திருக்காரு பாருங்க
Don't Miss!
- News
நீங்க தான் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட சொல்லனும்... ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- Finance
41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Technology
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாமனாருக்கு ’சும்மா கிழி’.. மருமகனுக்கு ’சில் ப்ரோ’.. பட்டாஸ் அப்டேட் இதுதான்!
சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெளியாகியுள்ள நடிகர் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனுஷின் பட்டாஸ் படத்தின் அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
தர்பார் படத்தின் சும்மா கிழி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரெக்கார்ட் பிரேக்கிங் செய்துள்ள நிலையில், பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில் ப்ரோ' பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.

அடுத்தடுத்து
அசுரன் படம் 150 கோடிக்கும் மேல் வசூல் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
|
டீஸர் எப்போ?
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தின் டீஸர் வரும் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
சில் ப்ரோ
பட்டாஸ் படத்திற்காக நடிகர் தனுஷ் பாடியுள்ள ‘Chill Bro' பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

யார் இசை
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் படத்திற்கு இசையமைத்த விவேக் மெர்வின் இசையில் பட்டாஸ் படத்தின் பட்டாஸ் பாடல்கள் உருவாகியுள்ளது. நாளை பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில் ப்ரோ பாடலை கேட்க தனுஷ் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.
|
வா தலைவா
தனுஷ் குரலில் 'சில் ப்ரோ' பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் #ChillBrவை டிரெண்ட் செய்து வருகின்றனர். வா தலைவா என இந்த ரசிகர், தனுஷ் பாடும் புகைப்படத்தை கமெண்ட் செய்துள்ளார்.
|
தகிட தகிட
பட்டாஸ் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வருவதற்கு முன்னதாகவே, பட்டாஸ் டீஸர் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகிறது என இந்த ரசிகர், போடு மாமா தகிட தகிட என ட்வீட் செய்துள்ளார். கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களே பாஸ்..
|
20 வயசு
20 வயசு பையனாவும் நடிக்கத் தெரியும், 20 வயசு பையனுக்கு அப்பனாகவும் நடிக்கத் தெரியும் என நடிகர் தனுஷின் அசுரன் மற்றும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படங்களை கம்பேர் செய்து இந்த ரசிகர் மீம் போட்டுள்ளார்.