அரசியல் குடும்பத்தில் வாக்கப்படும் தனுஷ் பட ஹீரோயின்.. மார்ச்சில் நிச்சயதார்த்தம்.. வைரல் போட்டோஸ்!
மும்பை: தனுஷின் பட்டாசு படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்ஸடாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா. தொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷின் பட்டாசு படத்திலும் நடித்துள்ளார் மெஹ்ரீன்.
மேலும் தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன்.

அரசியல்வாதியுடன் நிச்சயம்?
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மெஹ்ரீனுக்கு அரசியல்வாதி ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வந்தது. இதனை தொடர்ந்து மெஹ்ரீனின் அம்மா பம்மி பிர்ஸடா ஊடகம் ஒன்றிற்கு அதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

அரெஞ்சுடு மேரேஜ்
அதில் அவர் கூறியிருப்பதாவது, நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பரவும் தகவலில் உண்மை இல்லை. வரும் மார்ச் மாதம்தான் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இது முழுக்க முழுக்க பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணம்.

சந்தித்ததில்லை..
லாக்டவுன் நேரத்தில் அவர்கள் எங்களிடம் பெண் கேட்டார்கள். இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. அவர்களை போன் மூலம் நாங்கள்தான் அறிமுகப்படுத்தி வைத்தோம். லாக்டவுன் காரணமாக நேரில் சந்திக்க முடியவில்லை.

ஆலியா ஃபோர்ட்டில்
அதேபோல்தான் இரு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் தெரிந்துக் கொண்டோம். அவர்கள் இருவரும் கம்ஃபர்ட்டபிளாய் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம். நிச்சயதார்த்தம் வரும் மார்ச் 12ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஆலிலா ஃபோர்ட்டில் நடைபெறவுள்ளது.

பஜன் லாலின் பேரன்
நிச்சயதார்த்தம் மிகவும் நெருக்கமான உறவினர்களுடன் சிறிய ஃபங்கஷனாக நடைபெறவுள்ளது. நாங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, அளவான விருந்தாளிகளை மட்டுமே அழைக்கவுள்ளோம். மாப்பிள்ளை பவ்யா பிஷ்னோய் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார்.

கோலாகலமாக நடத்த திட்டம்
இருவருக்கும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யவில்லை. இந்த கொரோனா சூழ்நிலை சற்று மாறியதும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு நடிகை மெஹ்ரீன் பிர்ஸடாவின் தாய் பம்மி பிர்ஸடா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications