அடுத்த ஆளப்போறான் தமிழன்.. தெறிக்கவிடும் பட்டாஸ் ’மொரட்டு தமிழன் டா’ ரிலீஸ்!

Recommended Video

Pattas - Motion Poster | Dhanush | Surai Senthil Kumar | Sathya Jyothi Films

சென்னை: தனுஷின் பட்டாஸ் படத்தின் 'மொரட்டு தமிழன் டா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்சடா, ஸ்நேகா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது.

ஏற்கனவே பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல் வெளியாகி வைரலான நிலையில், தற்போது 'மொரட்டு தமிழன் டா' பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சினேகா பேக்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடித்த சினேகா, பட்டாஸ் படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘மொரட்டு தமிழன் டா' பாடலில், தனுஷுடன் சினேகா வரும் காட்சிகள் புகைப்படங்களாக காண்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆளப்போறான் தமிழன்

மொரட்டு தமிழன் டா செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பை நேற்று மாலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அப்போது இருந்தே ஆளப்போறான் தமிழனை பீட் செய்யும் அளவுக்கு மொரட்டு தமிழன் பாட்டு இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள மொரட்டு தமிழன் டா பாடல் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அளவுக்கு இருக்கிறது

தியேட்டர்களில் கொண்டாட்டம் தான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பட்டாஸ் படம் ரிலீசாகவுள்ள நிலையில், பக்கா தியேட்டர் செலிபிரேஷன் தான் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெய்வமே

இரட்டை மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு, பொங்கலுக்கு பக்காவான தமிழ் படத்தை கொடுக்க வருகிறார் நடிகர் தனுஷ் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசிகர் பல படிகள் மேலே போய், தெய்வமே என பதிவிட்டுள்ளார்.

அஜித் ரெஃபரன்ஸ்

அஜித் ரெஃபரன்ஸ்

பட்டாஸ் படத்தின் செகண்ட் சிங்கிளான மொரட்டு தமிழன் டா படத்தின் பாடல் வரிகளை ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய அதே பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். ஆனால், பாடல் வரிகளில் ஆரம்பம், வீரம், வரலாறு என பல அஜித் படங்களின் ரெஃபரன்ஸை வைத்துள்ளார் என அஜித் ரசிகர்களும் இந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சும்மா கிழியுது

போடு வேற லெவல், சும்மா கிழியிது, வீரத் தமிழனின் முரட்டு தமிழனாக ஒரு பாடல், பாடல் வரிகளுக்கு பாடலாசிரியர் விவேக்குக்கு நன்றி, பட்டாஸ் ரிலீசுக்கு வெயிட்டிங் என இந்த தனுஷ் ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: pattas பட்டாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X