For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரும் ஆனா வராது.. லேட்டாகும் பட்டாஸ் பாடல்கள் ரிலீஸ்.. கொல காண்டுல தனுஷ் ஃபேன்ஸ்!

    |

    சென்னை: பட்டாஸ் படத்தின் பாடல்கள் இன்று சூரியன் எஃப்.எம்மில் சிம்பிளாக ரிலீஸ் செய்யப்பட்டது.

    பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்தவில்லையே என சில ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.

    ஆனால், தற்போது தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி மீது தனுஷ் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர்.

    நண்பகல் 12.30 மணிக்கு லஹரி மியூசிக் யூடியூப் தளத்தில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை பாடல்கள் வெளியாகவில்லை.

    அதனால், தொடர்ந்து பட்டாஸ் பாடல்கள் வெளியாகாது குறித்து தனுஷ் ரசிகர்கள் ட்ரோல் செய்து தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

    2019ல் உங்களை ரசிக்க வைத்த ஹீரோ யாரு.. ஓட்டு போட்டு பதிலை சொல்லுங்க!

    வரும் ஆனா வராது

    வரும் ஆனா வராது

    பட்டாஸ் படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்க தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், சத்ய ஜோதி நிறுவனம் சொன்ன டைமுக்கு பாடலை வெளியிடவில்லை. இதனால், வரும் ஆனா வராது என சீமராஜா பாடலை போட்டு இந்த ரசிகர் கலாய்த்துள்ளார்.

    கோபப்பட வேண்டாம்

    யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும், பட்டாஸ் பாட்டு கண்டிப்பா வரும் தனுஷ் ரசிகர்கள் யாரும் கோபப்பட வேண்டாம் என இந்த ரசிகர் மீம் போட்டுள்ளார்.

    தூக்கத்தை போடுவோம்

    இப்போதைக்கு பட்டாஸ் பாடல்கள் வெளிவரும் என தெரியவில்லை. நம்மளும் ஒரு தூக்கத்தை போடுவோம் என இந்த ரசிகர் கலாய்த்துள்ளார்.

    மன்னிக்கவே மாட்டேன்

    சூரியன் எஃப்.எம்.மில் பாடல்களை சிம்பிளாக ரிலீஸ் செய்ததைக் கூட மன்னிச்சுடுவேன்.. ஆனா இன்னும் பாடல்களை ஆன்லைனில் வெளியிடாமல் இருக்கீங்க பார்த்தீங்களா அதை மன்னிக்கவே மாட்டேன் என இந்த ரசிகர் டென்ஷனாகியுள்ளார்.

    டெலிட் ஆகிடுச்சாம்

    பட்டாஸ் பாட்டெல்லாம் ஹார்டு டிஸ்க்கில் இருந்து டெலிட் ஆகிடுச்சாம்.. மறுபடியும் முதல்ல இருந்து ரீ-ரெகார்டிங் பண்ணணுமா என இந்த நெட்டிசன் மரண கலாய் கலாய்த்துள்ளார்.

    இது கடைசியா இருக்கட்டும்

    கிராண்ட் ஆடியோ லான்ச்.. ஆனா ஜூக் பாக்ஸ் இன்னும் வரலை என வடிவேல் மீம் போட்டு கலாய்த்துள்ள இந்த ரசிகர் இந்த டிலே கடைசியா இருக்கட்டும் என வார்ன் பண்ணியுள்ளார்.

    கொலை காண்டு

    தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் பட்டாஸ் பாடல்கள் மாலை 6 மணிக்கு வரும் என சத்யஜோதி அறிவித்துள்ளது. இதனை ஷேர் செய்துள்ள இந்த ரசிகர், நம்ம பசங்க கொலை காண்டுல இருக்கானுங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க எனக் கூறியுள்ளார்.

    பொங்கலுக்கு ரிலீசாகுமா?

    இவனுங்க பண்றத பார்த்தா படம் பொங்கலுக்கு கரெக்டா வருமானே டவுட்டா இருக்கு என இந்த ரசிகர், பட்டாஸ் படத்தின் ரிலீஸ் மீதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

    என்னடா பித்தலாட்டமா இருக்கு

    மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என சொல்லிவிட்டு, இப்போ மாலை 6 மணிக்குத் தான் ரிலீஸ் என சொல்கிறார்கள். என்னடா பித்தலாட்டமா இருக்கு என இந்த ரசிகர் ட்வீட் போட்டிருக்காரு.

    பட்டாஸ் இசை வெளியீடு

    சூரியன் எஃப்.எம்., நிலையத்தில் இன்று காலை நடிகர் தனுஷின் பட்டாஸ் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    English summary
    Pattas juke box not released on mentioned timing. The audio launch happened in Suriyan fm in a simple way. So many Dhanush fans get disappointed of the audio still not yet released on digital platforms.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X