’அடிமுறை’ இன்னொரு தமிழரின் பெருமை.. ’பட்டாஸ்’ படம் எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம் இதோ!

Recommended Video

Pattas Public Review | | Pattasu Review | Dhanush | Sneha

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ரோலில் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் ரிலீசாகியுள்ளது.

சில் ப்ரோ என ஜாலியான யூத்தாகவும், அடிமுறை கலையை கற்றுத் தரும் மொரட்டு தமிழன் தந்தையாகவும் தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தியுள்ளார்.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக சினேகா போல்டான நடிப்பை இந்த படத்தில் நடித்துள்ளார்.

பட்டாஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் ரசிகர்கள் முன்வைத்துள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

கமர்ஷியல் வெற்றி

பட்டாஸ் படத்தின் முதல் பாதி தனுஷ் ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைத்து ரசிகர்களுக்கான படமாகவும் பட்டாஸ் உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு பட்டாஸ் படம் கமர்ஷியல் வெற்றியை கொடுக்கும் என இந்த ரசிகர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

பொங்கலுக்கு ஏத்த படம்

பொங்கலுக்கு குடும்பத்தோட பார்க்குற மாதிரி நம்ம தமிழர் பாரம்பரியம் கொண்ட இதே மாதிரி படங்கள் ரிலீஸ் பண்ணுங்கப்பா.. தனுஷ் நல்லா இருக்கணும்னு தியேட்டர்ல ஒரு அங்கிள் சந்தோஷத்தோட சொல்றாரு இதுதான் தனுஷோட வெற்றி என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

தலைவன் ஜெயிச்சுட்டான்

தலைவன் ஜெயிச்சுட்டான் போலயே.. 95% பாசிட்டிவ் விமர்சனங்களா வருது என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

ஃபிளாஷ்பேக் மரண மாஸ்

கமர்ஷியல் பழி வாங்குற கதை தான் பட்டாஸ் படம். ஃபிளாஷ்பேக் மரண மாஸா இருந்தா போதும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஃபிளாஷ்பேக் தெறிக்கவிட்டுள்ளது என்றும் படம் நிச்சயம் ஹிட் என்றும் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

குட்டி.. உத்தமபுத்திரன்

குட்டி, உத்தமபுத்திரன் படத்தில் வர மாதிரி செம ஜாலியா ஒரு கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கு பட்டாஸ் என இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

போன வாரமே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்

தர்பார் படத்துக்கு போட்டியாக போன வாரமே பட்டாஸ் படத்தை ரிலீஸ் பண்ணியிருந்தா கலெக்‌ஷன் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் என தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து, படத்தின் காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ரசிகன்

ஒரு சிவகார்த்திகேயன் ரசிகனா சொல்றேன் படம் வேற லெவல்.. ஃபிளாஷ்பேக் சீன்லாம் வெறித்தனமா இருக்கு என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார். தனுஷ் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் திரவியப் பெருமாள் எனும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியுள்ளார்.

அடிமுறை கலை

பட்டாஸ் படத்தில் அடிமுறை எனும் தமிழரின் கலை பேசப்பட்டுள்ளது. கராத்தே, குங்ஃபூ போன்று தமிழர் பயன்படுத்திய அடிமுறை எனும் கலையை பட்டாஸ் படம் அருமையாக எடுத்து சொல்லியிருப்பதாக தனுஷ் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X