வெடிக்க தயாராகும் பட்டாசின் மவனே பாடல்… தெறிக்கவிட்ட ராப் பாடகர்
சென்னை : பட்டாஸ் படத்தின் மவனே பாடல் சூரியன் எப்.எம்மில் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரபல ராப் இசை பாடகரான அறிவு பாடி சும்மா தெறிக்கவிட்டு இருக்கிறார்.
பட்டாசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு பாடலான மவனே பாடலை படக்குழு இன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து படத்தின் லிரிக் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் துரை செந்தில் குமார் இயக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் தனுஷ், ஸ்நேகா, மெக்ரீன் பிர்ஸாடா, நாஸர், முனீஸ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தபடத்திற்கு விவேக்-மெர்வீன் இசையமைத்து உள்ளனர் .
தற்போது இந்த படத்தின் மவனே பாடல் யூடியூப்பில் லிரிக் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த தகவலை படக்குழு சமூக வலைத்தலங்களில் வெளியிட்டு உள்ளது. இதில் ஒரு தனுஷ் போஸ்டருடன் இந்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் "சில் ப்ரோ" பாடலில் இடம் பெற்ற தனுஷ் மிக ரௌதிரமாய் கோவத்துடன் இருக்கும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. முரட்டு தமிழன்டா பாடலில் வேறு கெட்டப்பில் தனுஷ் இருப்பார்.
இந்த மவனே பாடலை பிரபல ராப் இசை பாடகரான அறிவு பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலக்டிவ் இசை குழுவில் இருந்து வந்த ஒரு பெரிய பாடகர் என்றே சொல்லலாம். அறிவு பாடகரை தாண்டி நல்ல பாடலசிரியரும் கூட . இவர் குண்டு படத்தில் நிலமெல்லாம் பாடலை பாடியிருக்கிறார். தனுசின் வடசென்னை படத்தில் 'பட்டாபட்டி' மற்றும் 'மத்திய சிறையில்' பாடல்களையும் எழுதியிருக்கிறார் .
அறிவு தன்னால் முடிந்த நேரங்களில் பொது இடங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து சமூகத்துக்கான பல பாடல்களை நேரடியாக மக்கள் முன்னிலையில் பாடி வருகிறார். இவர் சமூக சீர்கேடுகளை எதிர்த்து சில ஆல்பங்களையும் தயாரித்து உள்ளார். அதில் ஆன்ட்டி இந்தியன், ஸ்நோலின் மற்றும் கள்ளமௌனி பாடல்கள் மிக பிரபலம் அடைந்தவை .
தனுஷ் தற்போது பட்டாஸ் படத்திற்கு பின், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் நடித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தான் முடிவடைந்தது. என படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்தகாக தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் , ராம்குமார் இயக்கங்களில் நடிக்க உள்ளார். அதை தாண்டி சன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











