ஜனவரியில் வெடிக்க வரும்… அசுரனின் "பட்டாசு"

சென்னை : தனுஷ் நடிக்கும் பட்டாசு ஜனவரி 16ந் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில், உண்மையிலேயே ஒரு அசுரன் என்பதை "பட்டாசு"மீண்டும் நிரூபிக்கும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஜனவரி மாதம் ராசியான மாதம் என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளிவந்த "விசுவாசம்" படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "பட்டாசு" திரைப்படத்தை திரையிட உள்ளனர்.

Pattasu release on january

அசுரன் படத்தின் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஒரு தந்தையின் அன்பை சொல்லும் அப்பாவாக இதுவரை நாம் தனுஷ்சை பாத்திராத கோணத்தில் நடித்து, நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் மாஸ் படமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது , புகழின் உச்சியில் இருக்கும் தானுசுக்கு மீண்டும் ஹிட் படமாக அமைய உள்ளது இந்த பட்டாசு. இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

"எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. கடந்த வருடம் ஜனவரியில் வெளி வந்த "விஸ்வாசம்" மாபெரும் வெற்றியை தந்தது. அதேபோல வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் "பட்டாசு" மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம். தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் உள்ளது. மிக ஜனரஞ்சகமான, கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எங்கள் நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் கூறினார்.

தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. "பட்டாசு' எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்களும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. அவர் நடிப்பில் உண்மையிலேயே ஒரு அசுரன் என்பதை "பட்டாசு"மீண்டும் நிரூபிக்கும் என்று பெருமிதத்தோடு கூறினார்.

நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X