போனி கபூர் ஒரு ஜென்டில்மேன்: பின்னால் தட்டியது பற்றி நடிகை விளக்கம்
மும்பை: போனி கபூர் தன்னை பின்னால் தட்டியது குறித்து நடிகை ஊர்வசி ரவ்தெலா விளக்கம் அளித்துள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஊர்வசி ரவ்தெலாவின் பின்னால் தட்டிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அதை பார்த்து பலரும் போனி கபூரை விளாசினார்கள். இந்நிலையில் இது குறித்து ஊர்வசி ட்வீட் செய்துள்ளார்.
ஊர்வசி
சமூக வலைதளங்களில் நானும், மதிப்பிற்குரிய போனி கபூர் சாரும் இருக்கும் வீடியோவை வைத்து கிண்டல் செய்வதை பார்த்து அதிரிச்சி அடைந்தேன். அவர் ஒரு ஜென்டில்மேன். சமூக வலைதளங்கள் யோசிக்காமல் இப்படி செய்வது வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். நான் போனி கபூர் சார் மீது மரியாதை வைத்துள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஊர்வசி.
கெரியர்
போனி கபூர் பெரிய தயாரிப்பாளர் என்பதால் ஊர்வசி அவருக்கு ஆதரவாக பேசுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கெரியர் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் அவர் இப்படி செய்வதாக விமர்சிக்கப்படுகிறது.
ஆதரவு
போனி பின்னால் தட்டியதால் அசவுகரியமாக ஃபீல் பண்ணியும் கெரியர் பயத்தில் ஊர்வசி இப்படி ட்வீட் செய்துள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
நடிகை
ஊர்வசியை கலாய்ப்பதை நிறுத்துங்கள். அவர்கள் எந்த சட்டங்களையும் மீறவில்லை. போனி கபூர் தட்டியது ஊர்வசிக்கு பிடித்திருந்தால், அதில் என்ன தவறு உள்ளது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











