twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்... மௌனம் கலைக்கும் தாய் ஷெரில் வாக்கர்!

    பால் வாக்கரின் மரணம் குறித்து அவரது தாய் ஷெரில் வாக்கர் பேசியுள்ளார்.

    |

    கலிஃபோர்னியா: ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மான்ஸ்டர் இன் த குலோசட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஃபாஸ் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் நடித்து இணையற்ற நடிகராக ரசிகர்கள் மனதில் உயர்ந்தார்.

    சுண்டி இழுக்கும் நீல நிறப் பார்வை, முரட்டுத்தனம் இல்லாத சாக்லேட் பாய் உடல்வாகு, அதை வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்வது என பல விஷயங்களைச் சொல்லலாம்.

    அசாத்தியமாக கார் ஓட்டுவதால் எல்லோரலாம் ரசிக்கப்பட்ட பால் வாக்கர், கார் விபத்திலேயே உயிரிழந்ததுதான் மிகப்பெரிய சோகம்.

    கடைசி பாகம்

    கடைசி பாகம்

    பிரியன் ஓ கான்னர் என்ற அவருடைய ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பட கதாபாத்திரத்தின் மீது ஏற்பட்ட பிரியத்தினால் சிலர் குழந்தைகளுக்கே அந்த பெயரை வைத்தனர். இறப்பதற்கு முன்பு அவர் நடித்த ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் 7வது பாகம் 2015 ஆம் ஆண்டு ரிலீசானபோது உயிருடன் இல்லாத பால் வாக்கரை நினைத்து உருகினார்கள் ஹாலிவுட் ரசிகர்கள்.

    ஷெரில் வாக்கர்

    ஷெரில் வாக்கர்

    பால் வாக்கர் இறந்து ஐந்துவருடங்கள் நெருங்கும் வேளையில், அவரின் இறப்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் பால்வாக்கரின் தாய், ஷெரில் வாக்கர்.

     கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    பால் வாக்கர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு, அவருடைய 15 வயது மகள் மீடோவ்வுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தாராம். அவர் விபத்தில் இறந்த நவம்பர் 30ஆம் தேதி, பால் வாக்கரின் தொண்டு நிறுவன நிகழ்வு இருந்துள்ளது.

     மறதி

    மறதி

    அந்த நிகழ்வை மறந்துபோன பால் வாக்கர், நான் அந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும். மறந்துவிட்டேன்... என அவசரமாக மெஸ்சேஜ் அனுப்பிவிட்டு சென்ற மகன் திரும்பி வரவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    அதிவேகம்

    அதிவேகம்

    2013 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நண்பர் ரோஜர் ரோடஸுடன் காரில் சென்றுள்ளார் பால் வாக்கர். சீக்கிரமாக தொண்டு நிறுவன நிகழ்வுக்கு செல்லவேண்டும் என்பதால் வேகமாக காரை இயக்கியுள்ளார் ரோஜர். அப்போது அதிவேகமாக சென்ற போர்ஷே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இருவருமே உயிரிழந்தனர்.

    ஐ ஆம் பால்வாக்கர்

    ஐ ஆம் பால்வாக்கர்

    பால் வாக்கரின் பணியை சிறப்பிக்கும் விதமாக பாரமவுண்ட் பிச்சர்ஸ், "ஐ ஆம் பால் வாக்கர்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

    English summary
    Late Hollywood actor Paul Walker’s said something about her son death. He was full of Christmas spirit and looking forward to celebrate with his 15 year old daughter Meadow. He forgotten his charity event, he texted me as Oh my gosh I am supposed to be somewhere. That was his last message she stated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X