துரத்தும் வறுமை...ரூ.10,000 க்கு விருதுகளை விற்ற நடிகை

ஐதராபாத் : தெலுங்கில் புகழ்பெற்ற துணை நடிகையும், காமெடி நடிகையுமாக இருந்தவர் பவள ஷ்யாமளா. இவர் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறுமையில் தவித்து வருகிறார்.

Pavala Shyamala sells off awards for money

தனது நிலை பற்றி பவள ஷ்யாமளா கூறுகையில், நான் மிகுந்த கீழ்நிலையில் இருந்து தான் புகழடைந்தேன். அதனால் வறுமை எனக்கு புதிதல்ல. ஆனால் முதுமை காலத்தில் வந்துள்ள வறுமை தான் என்னை வாட்டி எடுக்கிறது.

எனது மகள் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாகி விட்டார். அவள் காசநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளாள். மருத்துவ செலவு மட்டுமே மாதம் ரூ.10,000 ஆகிறது. கொரோனா பயத்தால் எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

வாழ்வாதாரத்திற்காக எனக்கு கிடைத்த விருதுகளை எல்லாம் விற்று விட்டேன். இப்போது உதவ யாரும் இல்லாமல் இருந்து வருகிறேன் என்றார் கண்ணீருடன்.

சமீபத்தில் துணை நடிகையான கராத்தே கல்யாணி, பவள ஷ்யாமளாவின் வீட்டிற்கு சென்று ரூ.10,000 நிதி அளித்துள்ளார். இருந்தும் மருத்துவம் மற்றும் இதர செலவுகளுக்கு வழியின்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார் பவள ஷ்யாமளா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X