போதைப் புகார்.. அப்போது நின்ற பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம் இப்போது நடந்தது.. மணப்பெண் டாக்டராம்!
பெங்களூரு: போதை பொருள் பழக்கம் பற்றிய புகாரால் நின்று போன நடிகரின் நிச்சயதார்த்தம் இப்போது நடந்துள்ளது.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.
இதில் அனிகா டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்தனர்.

போதை மாத்திரை
அனிகாவுக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருந்ததும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி, நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

போதைப் பொருள்
இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் கன்னட நடிகர் ஒருவர் நிச்சயதார்த்தம் நின்றுபோனது.

நிச்சயதார்த்தம் நிறுத்தம்
கன்னட நடிகர் பவன் சவுரியா. ஹாலி துப்பா, லூகிகட்டி, உடும்பா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மருத்துவரான லிகிதா என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது பரபரப்பாக பேசப்பட்டதால், நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

எளிமையாக நடந்தது
நடிகர் பவன் சவுரியாவும் போதைப் பொருள் பயன்படுத்துவாரோ என்ற பயத்தில், பெண் வீட்டார் நிச்சயதார்த்ததை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் இப்போது நடந்துள்ளது. இதுபற்றி பவன் சவுரியா கூறும்போது, 'நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது என்றார்.

தவறான எண்ணம்
'முதலில் பெண் வீட்டில் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதும் அதிர்ச்சி அடைந்தோம். லிகிதாவின் பெற்றோருக்கு தவறான எண்ணம் வந்துவிட்டது. அவர்களுக்கு சம்மதம் இல்லை. தொடர்ந்து லிசிகாவிடம் போனில் பேசி வந்தேன். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை என்பதைத் தொடர்ந்து கூறினேன்.

டாக்டர் லிகிதா
என் குடும்பத்தினரும் பேசி வந்தனர். லிகிதா டாக்டர் என்பதால் புரிந்துகொண்டார். பிறகுதான் எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடக்கிறது. கொரோனா தொற்றைப் பொறுத்து திருமண விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு பவன் சவுரியா கூறினார்.


Click it and Unblock the Notifications











