இந்த வாரம் பாவனி ராஜ்ஜியம்... வசமா மாட்டிய ஹவுஸ்மேட்ஸ் !

சென்னை : பிக்பாஸ் வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த காயின் வைத்திருப்பவர்கள். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து வருகின்றனர்.

இந்த வாரம் ஆகாயத்தின் நாணயத்தை வைத்திருக்கும் பவானிக்கு வீட்டை ஆளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இசைவாணி சர்வாதிகாரி

இசைவாணி சர்வாதிகாரி

பஞ்ச தந்திர டாஸ்கின் போது, கைப்பற்றப்பட்ட நாணயத்திற்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது. நெருப்பு காயினை வைத்திருந்த இசைவாணிக்கு கூடுதல் சக்தி கிடைத்தது. இதனால் அவர், சமையல் அறையில் ஆதிக்கம் செலுத்தினார். இதனால், அண்ணாச்சி அவரை சர்வாதிகாரி போல செயல்படுவதாக கூறினார்.

கொஞ்சம் அடக்கிவாசி

கொஞ்சம் அடக்கிவாசி

இதையடுத்து, கடந்தவாரம், நிலத்தின் காயினை வைத்துக்கொண்டு பெட்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். அப்போது அனுமதி இல்லாமல் பெட்ரூமுக்குள் வந்த பாவ்னி, ஸ்ருதி, மதுமிதாவுக்கு பச்சைமிளகாய் , பாவக்காய் சாப்பிடும் தண்டனை கொடுத்தார். இதனால், கடுப்பான நெட்டிசன்ஸ் அவரை ஓவரா ஆட்டம் போடுற நிரூப், கொஞ்சம் அடக்கிவாசி என்று கருத்துக்கூறினர்.

பவானிக்கு சூப்பர் பவர்

பவானிக்கு சூப்பர் பவர்

இதையடுத்து, ஆகாயத்தின் நாணயத்தின் காயினை வைத்திருக்கும் பவானிக்கு கூடுதல் சலுகையை பிக் பாஸ் வழங்கினார். பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் இடியும் மின்னலும் அவ்வபோது இங்கே உருவாகும் அப்படிப்பட்ட ஆகாயத்தின் நாணயத்தை வைத்திருக்கும் பவானிக்கு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தாமரை உதவியாளர்

தாமரை உதவியாளர்

பவானி இடம் அனுமதி வாங்கினால் மட்டுமே லிவ்விங் ஏரியாவில் நடக்கவோ பயன்படுத்தவோ முடியும். பவானியிடம் அனுமதி பெறாமல் வருபவர்களுக்கு அவர் தண்டனை கொடுக்கலாம், பாவனி கூறுவதை மற்ற போட்டியாளர்கள் செய்கிறார்களா என்பதை கண்காணித்து தெரிவிக்க ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ளலாம் என்று பிக் பாஸ் என பல சலுகைகளை வழங்கி உள்ளார்.

எலியும் பூனையுமாக

எலியும் பூனையுமாக

இதையடுத்து, பவானி தாமரையை தன்னுடைய உதவியாளராக தேர்வு செய்தார். சனிக்கிழமை கமலின் முன்னிலையிலேயே பாவனி மற்றும் தாமரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், எலியும் பூனையுமாக இருக்கும் இவர்கள் இருவரும் எப்படி இணைந்து செயல்பட போகிறார்கள் என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X