நான் இப்போ அவங்க கன்ட்ரோல்ல இருக்கேன்.. கமல் முன்னாடி பாவனியுடன் பாய்ந்து பாய்ந்து நடனமாடிய அமீர்!

சென்னை: பாவனியை அந்தளவுக்கு அமீர் பாடாய்ப்படுத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அவர் முன்னிலையில், பாவனி மற்றும் அமீர் நடனமாடிய காட்சிகளை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாவனி, அமீர்

பாவனி, அமீர்

பாவனி மற்றும் அமீர் இருவருமே பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். பாவனியை அமீர் துரத்தி துரத்தி காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ஜோடிகளாகவே நடனமாடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல ஜோடிகள் பிரிந்த நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 மூலம் தொடர்ந்து இருவரும் ஜோடிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்கிறார்களா

காதலிக்கிறார்களா

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? என்கிற கேள்விக்கு பாவனி தொடர்ந்து நோ சொல்லித் தான் வருகிறார். ஆனால், அமீர் தொடர்ந்து பாவனியை எப்படி கரெக்ட் பண்ணுவது என்கிற மோடிலே செயல்பட்டு வருகிறார் என நெட்டிசன்கள் அவர்களது நெருக்கத்தை பார்த்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். ஆனால், இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களை காதலர்கள் என சொல்லிக் கொள்ளவில்லை.

பாடாய்ப்படுத்திய அமீர்

பாடாய்ப்படுத்திய அமீர்

சமீபத்தில் அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரிஹர்சல் செய்து வந்த பாவனி ஷேர் செய்த வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அந்தளவுக்கு செம ஸ்ட்ரெட்ச் கொடுத்து அவரை பிராக்ட்டீஸ் என்கிற பெயரில் பாடாய்ப்படுத்தி இருந்தார். வேறு ஆளை மாற்றிக் கொள்ள வழி இருக்கிறதா? என்றே பாவனியும் கேப்ஷன் போட்டது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பாவனி கன்ட்ரோல்ல

பாவனி கன்ட்ரோல்ல

ஆனால், பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பாவனிக்கு நிச்சயம் அதற்கு உண்டான பலன் இந்த பர்ஃபார்மன்ஸ் ஒளிபரப்பு ஆன பிறகு கிடைக்கும் என புரமோவை பார்த்தே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாவனியை ரப்பர் பொம்மை போல தூக்கிப் போடுவதும், இருவரும் பாய்ந்து பாய்ந்து நடனமாடும் காட்சிகளும் தற்போது வெளியாகி வியப்பை கொடுக்கின்றன. நிகழ்ச்சியில் பேசிய அமீர், ஆரம்பத்தில் தான் பாவனி என் கன்ட்ரோல்ல இருந்தாங்க, அப்புறம் இப்போ நான் தான் அவங்க கன்ட்ரோல்ல இருக்கேன் என்றார்.

ஹோஸ்ட் இல்லை கெஸ்ட்

ஹோஸ்ட் இல்லை கெஸ்ட்

பிக் பாஸ் ஹோஸ்ட்டாக இருந்து சீசன் 5ல் பாவனிக்கும் அமீருக்கும் குறும்படம் போட்டுக் காட்டி பந்தாடிய கமல்ஹாசன், தற்போது ஹோஸ்ட்டாக இல்லாமல் விக்ரம் படத்தை புரமோட் செய்யும் கெஸ்ட்டாக வந்துள்ளார். பாவனி மற்றும் அமீரின் நடனத்தை பார்த்து மெய் மறந்து பாராட்டி உள்ளார் கமல்.

Recommended Video

Amir-அ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா.. Pavani Open Talk #TV | Filmibeat Tamil #TV
டைட்டில் கன்ஃபார்ம்

டைட்டில் கன்ஃபார்ம்

பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனின் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் தட்டிச் சென்ற நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டிலை பாவனி மற்றும் அமீர் தான் தட்டிச் செல்ல போகின்றனர் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் இருவரையும் பாராட்டி ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X