என்னவளே மியூசிக்கோட பாவனி லவ் புரமோ போட்ட பிக் பாஸ் எடிட்டர்.. பிரியங்கா ரியாக்ஷன் தான் வேற லெவல்!

சென்னை: தொடர்ந்து சண்டை புரமோவாக போட்டு போட்டு பிக் பாஸ் எடிட்டருக்கே போர் அடிச்சிடுச்சு போல தெரிகிறது.

பாவனி மற்றும் அமீரின் ரொமான்ஸ் புரமோவை என்னவளே பாடல் இசையுடன் சேர்த்து போட்டு கோர்த்து விட முயற்சி செய்து வருகிறார்.

இந்தக் கன்றாவியை எல்லாம் பார்க்கணுமா என்பது போல பிரியங்கா கொடுக்கும் ரியாக்‌ஷன் அப்படியே ரசிகர்களின் ரியாக்‌ஷன் போல இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சண்டை வரும்னு பார்த்தா

சண்டை வரும்னு பார்த்தா

மியூசிக்கல் சேர் எனும் கஷ்டமான போட்டியில் கஷ்டப்பட்டு முதல் முறையாக ஜெயித்து பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக ஆகிவிட்டோம் என சந்தோஷப்பட்ட அமீருக்கு முதுகில் குத்துவது போல கேப்டன்சி டாஸ்க்கை பறித்துக் கொண்டு காயின் கேப்டனாக பாவனி மாறியதும் இன்றைய புரமோவில் இருவரும் சண்டை போடுவார்கள் என பார்த்தால் மீண்டும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

லவ் புரமோ

லவ் புரமோ

பிக் பாஸ் புரமோக்கள் இந்த சீசனில் அதிகளவு சண்டை புரமோவாகவும் பிராங்க் சண்டை புரமோவாகவுமே வந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் புரமோவை போட ரொம்பவே கஷ்டப்பட்டு மெனக்கெட்டு இருக்கிறார் பிக் பாஸ் எடிட்டர் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

என்னவளே மியூசிக் வேற

என்னவளே மியூசிக் வேற

காதலன் படத்தில் இடம்பெற்ற என்னவளே பாடலின் மியூசிக்கை வேற புரமோவுக்கு பேக்ரவுண்டில் ஓடவிட்டு பிக்பாஸ் எடிட்டர் தீயாக வேலை பார்த்துள்ளதை பார்த்து ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இப்படி எல்லாம் பண்ணா பாவனி வீட்டில் பார்க்க மாட்டாங்களா? அவருக்கு தெரிந்தால் கஷ்டப்பட மாட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரியங்கா ரியாக்‌ஷன்

பிரியங்கா ரியாக்‌ஷன்

பாவனியின் ஃபேன் என சொல்லிக் கொண்டு அமீர் உள்ளே வந்ததில் இருந்தே இருவரும் ரகசியமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் பிரியங்கா படுத்து இருக்கும் இடத்தில் பாவனியும் அமீரும் படு ரொமான்ட்டிக்காக பேசுவது போல பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இந்த கன்றாவியை எல்லாம் பார்க்கணும்னு என் தலையில் எழுதி இருக்கு என நினைத்து தலையில் அடித்துக் கொள்ளும் பிரியங்காவின் ரியாக்‌ஷன் வேற லெவல்.

அபிநய் எங்கே

அபிநய் எங்கே

இந்த சீனில் பிரியங்காவுக்கு பதில் அபிநய் இருந்திருந்தால் அவருடைய ரியக்‌ஷன் வேற மாறி இருந்திருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாவனி உடன் நெருக்கமாக அமீர் பேசி வருவதாலே அபிநய் அவரை நாமினேட் செய்ததை பார்த்து நேற்றே மீம்களை போட்டு நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினார்கள்.

Recommended Video

GV Prakash உடன் 10 வருஷம் பேசவில்லை | Jail Vasanthabalan Open speech | Filmibeat Tamil
பணிப்பெண் பாவனி

பணிப்பெண் பாவனி

அக்‌ஷரா, தாமரை செல்வி, பிரியங்கா என மூன்று பெண்களுக்கு பாவனி இந்த வாரம் பணிப்பெண்ணாக மாறி உள்ளார். முதல் புரமோவில் சிரித்து ரொமான்ஸ் செய்யும் பாவனி அடுத்தடுத்த புரமோக்களில் யாருடன் சண்டைக்கு நிற்க போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X