நாடகம் முடிந்தது.. ராஜுவை கட்டிப்பிடித்து சண்டைக்கு எண்ட் கார்டு போட்ட பாவனி.. வைரலாகும் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக வைக்க நடத்தப்பட்ட இந்த வார நாடகம் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாவனியும் அபிநயும் லவ் பண்றாங்களா இல்லையா? என ராஜு கிளப்பிய சந்தேகம் மற்றும் பாவனிக்கும் அபிநய்க்கும் இடையே நட்பும் இல்லை காதலும் இல்லை என சிபி பேசியதும் பெரிய பிரச்சனையை கிளப்பியது.
ராஜுவிடம் என்னோட பர்சனல் விஷயத்தை பற்றி கேட்பதற்கு நீ யாரு என நேற்று சவுண்ட் போட்ட அதே பாவனி இன்று கட்டிப்பிடித்து சமாதானம் ஆகிவிட்டார்.

பொங்கிய ரசிகர்கள்
இது ஒரு ரியாலிட்டி ஷோ இதில் ரியாலிட்டியே இருக்காது என இதில் பங்கேற்ற கஸ்தூரி முதல் பல பிக் பாஸ் பிரபலங்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும், பிக் பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு வெகுவாக பொங்கி வருகின்றனர். பாவனிக்கு எதிராக ராஜு மற்றும் சிபி செய்த தவறை கண்டித்து பாவனி ஆர்மியினர் நேற்று பொங்கி எழுந்து #WeStandWithPavni ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

சமாதானம் ஆன பாவனி
நேற்று ராஜு மற்றும் சிபியிடம் அப்படி சண்டை போட்ட பாவனி மனதளவில் எப்படி உடைந்து போயிருப்பார் என புரிந்து கொண்டு ராஜு மற்றும் சிபி நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு கிடைத்த பலனாகவே இன்றைய முதல் புரமோ பார்க்கப்படுகிறது.

ராஜுவை கட்டிப்பிடித்து
பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே இதுவரை நடந்து வந்த பனிப்போர் இத்துடன் நிறைவுக்கு வந்து விட்டதை போல ராஜு தான் ஒன்றாக அமர்ந்து சாப்பிட சொன்னார் என சஞ்சீவ் சொல்ல, ராஜு, நிரூப், இமான் அண்ணாச்சி, சிபி என ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கட்டி அணைத்து சமாதானம் ஆனார் பாவனி.

நாடகம் முடிந்தது
பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு பிரச்சனை வந்தாலும் அடுத்த நாளே அது அங்கேயே சரி செய்யப்பட்டு சமாதானம் ஆகிவிடும். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை, காதல், நட்பு என எல்லாமுமே அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் நீடிக்காது என்பது போல நேற்று நடந்த பாவனி சண்டையும் இன்று சரியாகி விட்டது.. போ போ போய் பொழப்பப்பாரு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











