ரூ. 9 லட்சம் பணப்பெட்டியை கண்ணில் காட்டிய பிக் பாஸ்.. தாமரையை எடுக்கச் சொல்லி தூண்டிய பாவனி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டிகள் பள பளவென கண்களை பறித்து வருகின்றன.

கடந்த சீசனில் ரூ. 5 லட்சம் பெட்டி வந்த உடனே கேபி ரியோவுக்கு முன்னதாக தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆன நிலையில், இந்த சீசனில் எல்லாருமே பக்கா ஸ்ட்ராட்டஜியுடன் பெரிய அமவுண்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

ரூ. 5 லட்சம் லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் வர போட்டியாளர்களின் மன நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்துள்ளது.

9 லட்சம்

9 லட்சம்

சரத்குமார் ரூ. 3 லட்சம் பெட்டியுடன் உள்ளே வந்த நிலையில், தற்போது ரூ. 9 லட்சம் வரை பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டியின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. ரூ. 12 லட்சம் வரை வந்து அதனை ஒருவர் எடுத்துக் கொண்டே வெளியேறி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பது வேறு கதை.

புது குரூப்

புது குரூப்

பிக் பாஸ் வீட்டில் தனியாக விளையாடுகிறேன் என சொல்லிக் கொண்டு திரியும் பாவனி, தாமரை மற்றும் நிரூப் ஆகிய மூன்று பேரும் ஒரே க்ரூப்பாக தற்போது மாறியுள்ளனர். மறு பக்கம் ராஜு, பிரியங்கா, சிபி மற்றும் அமீர் நேர்மை, நியாயம், அன்பு க்ரூப்பாக வலம் வருகின்றனர்.

தாமரையை துரத்த

தாமரையை துரத்த

ஃபைனல்ஸ் வரை தாமரை பிக் பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது என்றும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறி விட வேண்டும் என்றும் நிரூப் மற்றும் பாவனி தொடர்ந்து தாமரையை பிரைன் வாஷ் பண்ணி வருகின்றனர். கோடி கொடுத்தாலும் எடுத்துச் செல்ல மாட்டேன் என நிரூப்புக்கு செம நோஸ் கட் செய்து விட்டார் தாமரை.

இந்தி பிக் பாஸ் வேற

இந்தி பிக் பாஸ் வேற

இந்தியில் ரூ. 50 லட்சம் வரை வரும் என நிரூப் சொல்வதை பார்த்தால், தமிழ் பிக் பாஸ் 4 சீசன்கள் மட்டும் இல்லாமல் இந்தி பிக் பாஸ் எல்லாம் பார்த்து கரைத்துக் குடித்து விட்டு நிரூப் வந்திருக்கிறார் போல தெரிகிறது. சரத்குமார் சொன்னது போலவே இவர் பிக் பாஸ் புரொபஸர் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தாமரையை தூண்டும் பாவனி

தாமரையை தூண்டும் பாவனி

பணக் கஷ்டம், கடன் தொல்லை இருந்து விடுபட இது நல்ல வாய்ப்பு ரூ. 9 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது நல்ல யோசனை என தாமரை அருகே அமர்ந்து கொண்டு பாவனி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ரூ. 12 லட்சம் பணத்தை யார் எடுத்திருப்பார்? என தெரிந்து கொள்ளவே ரசிகர்கள் பேராவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X