இந்த டாஸ்க்குக்கு அப்புறம் இருவரும் நட்பாக நிறைய வாய்ப்பு இருக்கு.. சும்மா இறங்கி கலக்கும் பாவனி!
சென்னை: ராஜு ஜெயமோகனுக்கு சிறந்த என்டர்டெயினர் விருதை கொடுத்த பாவனி தனக்கு இந்த வீட்டில் சிறந்த என்டர்டெயினர், சிறந்த டிரெஸ்சிங் மற்றும் பெஸ்ட் பிளேயர் விருதை கொடுக்கலாம் எனக் கூறியிருந்தார்.
ஆனால், அவருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. செவ்வாய் கிழமை நடந்த கண்ணாடி டாஸ்க் எபிசோடை பார்த்த அனைவரும் பாவனிக்கு அத்தனை விருதுகளையும் கொடுக்கலாம் என பாராட்டி வருகின்றனர்.
பாவனியை வெஷ பாட்டில் என சொன்ன ராஜுவே இந்த டாஸ்க் முடிந்தவுடன் அவருடன் நட்பாகி விடுவார் என்றும் நெட்டிசன்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சூப்பர் ஜோடி
கண்ணாடி டாஸ்க்கில் யாருக்கெல்லாம் செட் ஆகாதோ அவர்களை எல்லாம் சரியாக புரிந்து கொண்டு பிக் பாஸ் சும்மா வச்சு செய்ய ஒவ்வொரு போட்டியாளர்களையும் அவர்களின் கண்ணாடி பிம்பத்தையும் தேர்வு செய்துள்ளார். இதில், ரசிகர்களை என்டர்டெயின் பண்ணும் சூப்பர் ஜோடியாக ராஜு பாவனி ஜோடி அமைந்துள்ளது என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பக்காவா பண்ணும் பாவனி
கேம் என்று வந்து விட்டால் சும்மா இறங்கி பக்காவா ஆடி வருகிறார் பாவனி என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த எபிசோடை பார்த்து பாவனியை பாராட்டி வருகின்றனர். ராஜு செய்யும் குசும்புத் தனங்களை எல்லாம் அப்படியே காப்பியடித்து பாவனி செய்து வருவதை பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருக்கு.

நல்ல என்டர்டெயின்மென்ட்
அபிநய், நிரூப் சண்டையை ஷார்ட் பண்ணிட்டு பாவனி மற்றும் ராஜுவின் என்டர்டெயின்மென்ட் காட்சிகளை இன்னமும் கொஞ்சம் கூட சேர்த்து இருக்கலாமே என பிக்பாஸ் எடிட்டர்களை பார்த்தே ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர். கண்டிப்பாக அன்சீனிலும் இவர்களது அலப்பறை அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

ஒருவேளை அப்படி நடந்துடுமோ
பாவனியை ஆரம்பத்தில் இருந்தே வெஷ பாட்டில் என சொல்லி வருவதால் மட்டுமே ராஜுவுக்கான நெகட்டிவ் பாயின்ட் பாவனி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. இந்த டாஸ்க்கின் இறுதியில் இருவரும் ஒருவேளை நண்பர்களாக மாறிவிடுவார்களோ என்கிற எண்ணமும் எழுந்துள்ளது. ஆனால், கண்ணாடி முன்பாக நின்று கொண்டு பாவனி ராஜு பற்றி பேசுற பேச்சில் தான் பிரச்சனை இருக்கு என்றும் அதே போல பாவனியை பற்றி ராஜு வெளிப்படையாக பேசினாலும் வில்லங்கம் காத்திருக்கு என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











