Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சிபியை ஹக் பண்ண பாவனி.. அபிநய் பக்கமே போகலையே.. அந்த கேள்விக்கு அப்படியே மழுப்பிட்டாரே?
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
சுருதி மற்றும் நாடியா சங் சீருடன் வந்து மாலை அணிவித்து ஃபைனலிஸ்ட்டுகளை சந்தோஷப்படுத்திய நிலையில், அவர்களை தொடர்ந்து சிபி மற்றும் அபிநய் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
சிபி மற்றும் அபிநயை மற்ற போட்டியாளர்கள் வரவேற்ற நிலையில், பாவனி அபிநய் பக்கமே போகாதது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சுருதி இருந்திருக்கலாம்
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள சுருதியை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் பூரித்து போயுள்ளனர். பாவனிக்கு பதிலாக சுருதி இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பல பிரச்சனைகள் கிளம்பியே இருக்காது என்றும் சிறப்பாக விளையாடி இருப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மற்றும் அபிநய்
சுருதி, நாடியா சங், சிபி என முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், சிபியுடன் மற்றும் அபிநய்யும் வீட்டிற்குள் செம ஹேண்ட்ஸமாக உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் ரேடியோ ஸ்டேஷன் செட்டில் இருவரும் அமர்ந்து கொண்டு பேச பிரியங்கா ஜவ்வு கிழிய அவர் ஸ்டைலில் கத்திக் கொண்டே ஓடி வந்து சிபிலாவை கட்டி அணைத்தார்.

சிபியை கட்டிப்பிடித்த பாவனி
சிபி மற்றும் அபிநயை பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளர்கள் வரவேற்றனர். ராஜு அபிநய்க்கு கை கொடுத்து வரவேற்றார். சிபியை கட்டியணைத்து பாவனி வரவேற்றார். பிரியங்கா, அமீர், நிரூப், ராஜு என 4 போட்டியாளர்களும் இருவரையும் அன்போடு வரவேற்றனர்.

அபிநயை கண்டுக்காத பாவனி
அபிநய் தான் தனது எல்லா பிரச்சனைக்கும் காரணம் என நினைத்த பாவனி இன்னமும் அவர் மீது உள்ள கோபத்தை போக்கிக் கொள்ளாமல் இருக்கிறார் என்பது அபிநயை நாசுக்காக அவர் அவாய்ட் பண்ணியதில் இருந்தே தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அபிநய் திருந்திட்டாரு
அதே போல பாவனி பக்கமே அபிநய் போகாமல் இருந்தது நல்ல விஷயம் என்றும் இதை முன்பே கடைபிடித்து இருந்தால் இந்த அளவுக்கு பெயர் கெட்டுப் போய் இருக்காது என்றும் அபிநய்க்கு நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் பாவனியையும் அமீரையும் சேர்த்து வைத்து பேசும் இடங்களில் எல்லாம் அபிநய் லேசாக அந்நியனாக மாறினார் என்றும் நெட்டிசன்கள் நோட் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றனர்.

மழுப்பிய பாவனி
சிபி கேள்விகளை ஆரம்பிக்கும் போதே யாரும் மழுப்பாமல் மனதுக்கு பட்டதை பளிச்சென பதில் சொல்ல வேண்டும் என்றே சொல்லி இருந்தார். பாவனியிடம் சிபி இந்த வீட்டை விட்டு எந்த போட்டியாளர் போகும் போது ரொம்ப சந்தோஷப்பட்டீங்க என்கிற் கேள்வியை கேட்டதும் பளிச்சென பதில் சொல்லாமல் யாருமே இல்லை என பாவனி சொன்னது மழுப்பல் பதில் என்றும் உண்மையிலேயே அபிநய் போனதும் பாவனி ரொம்பவே ஹேப்பி ஆகிட்டார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சமாதானம் ஆவார்களா
பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய் வெளியேறுவதற்குள் பாவனி மற்றும் அபிநய் ஒருவருடன் ஒருவர் பேசி புரிந்துக் கொண்டு நமக்குள் எந்த பிரச்சனையும் இல்லை ஏதாவது தவறாக நடந்திருந்தால் சாரி என சொல்லி சமாதானம் ஆவார்களா? என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.