கரிகாலன் மேஜிக் ஷோவா.. பாவனியை பெட்டிக்குள் வைத்து பூட்டி பார்சல் பண்ண ராஜு.. வாய் பிளந்த ரசிகாஸ்!
சென்னை: பாவனியை பெட்டிக்குள் வைத்து பூட்டி ஸ்டோர் ரூமுக்கு ராஜு கொண்டு சென்ற வெள்ளிக்கிழமை காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பாவனிக்கு இந்த அளவுக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதே ரசிகர்களுக்கு இப்போது தான் தெரிகிறது.
ராஜுவும் பாவனியும் ஆரம்பத்தில் இருந்தே பேசி இருந்தால் வேற லெவல் என்டர்டெயின்மென்ட் கிடைத்திருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கரிகாலன் மேஜிக் ஷோ
வருண் ஆரம்பித்து வைத்த மேஜிக் ஷோ தொடர்ந்து ராஜு ஜெயமோகனால் இமிடேட் செய்யப்ப்ட்டு வருகிறது. ராஜுவுடன் இணைந்து பாவனியும் மேஜிக் ஷோவில் பங்கேற்றது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த பொண்ணுக்குள்ள இத்தனை திறமை ஒளிஞ்சிருக்கா என வாய் பிளந்து பார்த்தனர். வடிவேலுவின் கிரேட் கரிகாலன் மேஜிக் ஷோ மாதிரி பிக் பாஸ் ஆகிடுச்சே என கமெண்ட்டுகளும் பறக்கின்றன.

டாக்டர் படத்தில்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உள்ளிட்ட ஏராளமான கடத்தல் படங்களில் குழந்தைகளை பெட்டிக்குள் வைத்து கடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய பொண்ணான பாவனி அழகாக தன்னை மடக்கிக் கொண்டு சூட் கேஸுக்குள் முழுவதுமாக மூடி நகர்த்தி செல்லும் அளவுக்கு மூச்சை அடக்கி இருந்தது வேற லெவல்.

ராஜு ரகளை
பாவனியிடம் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கி பழகாமல் விலகி இருந்த ராஜு இப்போ பாவனியுடன் செம ஜாலியாக பழகி விளையாடி வருவதை பார்த்த பாவனியின் ஆர்மியினர் சற்றே சிரித்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர். பாவனியை பெட்டிக்குள் பூட்டி ராஜு பண்ண ரகளை ரசிகர்களை ரசிக்க வைத்தது.

வாவ் வருண்
ராஜு உடன் இணைந்து கொண்டு பெட்டிக்குள் இருக்கும் பாவனியை ஸ்டோர் ரூம் வரைக்கும் கொண்டு சென்ற வருண் பிக் பாஸ் ஸ்டோர் ரூமை திற்ந்து விடுங்க இந்த லக்கேஜை வீட்டுக்கு அனுப்பணும் என விளையாடி செம என்டர்டெயின்மென்ட் பண்ணி ரசிகைகளிடம் வாவ் வாங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











