தாமரை போல நான் பாசம் வைத்திருந்தேன்… அதை அவ புரிஞ்சிக்கல… வருத்தப்படும் பவானி !

சென்னை : தாமரை மேல நான் ரொம்ப பாசம் வைத்திருக்கிறேன் என்று பவானி மதுமிதாவிடம் கூறிக்கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வாரம் சின்னப்பெண்ணு எலிமினேஷன் செய்யப்பட்டார்.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ள

கமல் பேச்சு

கமல் பேச்சு

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களுடன் பேசினார். அப்போது, பட்டிக்காடா, பட்டணமா டாஸ்கின் போது உடை குறித்து பேசிய தாமரை மற்றும் ராஜுக்கு பல்வேறு விளக்கங்களை கொடுத்தார்.

சின்னப்பொண்ணு எலிமினேட்

சின்னப்பொண்ணு எலிமினேட்

நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினார். இதில் பிரியாங்கா, அக்ஷரா , ஸ்ருதி, பவானி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். இறுதியில் வரை யார் எலிமினேட் என்று சொல்லாமல் வைத்திருந்த கமல் இறுதியில், சின்னப்பொண்ணு வெளியேறுவதாக அறிவித்தார். அபினய் மற்றும் வருண் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

தாமரையை பிடிக்கும்

தாமரையை பிடிக்கும்

கார்டன் ஏரியாவில் ஸ்ருதி, பவானி, மதுமிதா 3வரும் பேசிக்குக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது பாவனி, நான் தாமரைக்கிட்ட ரொம்ப பாசமா இருந்தேன், எனக்கு தாமரையை ரொம்ப பிடிக்கும், நாமினேஷனில் இதுவரை தாமரையின் பெயரை நான் சொன்னதே, ஆனா அவ அதை புரிஞ்சிக்கல என்றார். உடனே குறுக்கிட்ட ஸ்ருதி நானும் தாமரையின் பெயரை நாமினேஷனில் சொன்னது இல்லை. இந்த முறையும் தாமரையின் பெயரை சொல்ல மாட்டேன். ஏன்னென்றால் அதைவிட நாமினேஷன் செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார்.

நான் எடுப்பேன்

நான் எடுப்பேன்

இசைவாணியின் நெருப்பு ஆற்றல் முடிவடைந்ததால், நாணயத்தை பெடஸ்டரலிருந்து எடுத்து பாதுகாப்பாக எடுத்து வைத்துக்கொள்ளும் படி பிக் பாஸ் அறிவுறுத்தினார். இதையடுத்து, அப்போது, இசைவாணியிடம் பாவ்னி காயினை பாதுகாப்ப வைச்சிக்கோ நான் நாணயத்தை எடுத்துவிடுவேன் என்று கூறினார்.

கடுமையாக நடந்து கொண்டார்

கடுமையாக நடந்து கொண்டார்

இதேபோல இசைவாணியும் தாமரையிடம் இந்த வாரம் நான் உங்களை நாமினேட் செய்யபோகிறேன் என்கிறார். எல்லாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறீங்க என்கிறார். இதற்கு தாமரை பண்ணுப்பா என்கிறார். கடந்த வாரம் தாமரையின், காயினை ஸ்ருதி எடுத்துக்கொண்டதால் மிகவும் ஆத்திரத்தில் இருந்த தாமரை அனைவர் இடத்திலும் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் இதனால் இந்த வாரம் அவர் பலரும் நாமினேட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X