கணவர் இறந்தபோது ஷாக்காகி அப்படியே உட்கார்ந்து விட்டேன்.. அழக்கூட முடியல.. குமுறி அழுத பாவனி ரெட்டி !
சென்னை : என் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தப்போது ஷாக்காகி அப்படியே உட்கார்ந்துவிட்டேன் என்று பிக் பாஸ் வீட்டில் பவானி ரெட்டி மனம் குமுறி அழுதார்.
பிக் பாஸ் சீசன் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் ராஜு, நமீதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
4வது நாளான இன்று டூடு டூடுஎன்ற பாடலுடன் பொழுது விடிந்தது. பிக் பாஸ் வீட்டில் எப்போதும் ஆரம்பம் ரொம்ப நல்லத்தொடங்கும் இறுதியில் தான் களேபரம் வெடிக்கும் ஆனால், இன்றைய பிக்பாஸ் வீடு அனைவரின் அழுகாச்சியால் தண்ணீரில் மிதந்தது.

கதறி அழுத நமிதா
பிக் பாஸ் வீட்டில் நான் "ஒரு கத சொல்லட்டுமா?" டாஸ்கில் நமிதா மாரிமுத்து, ஒரு திருநங்கையாக வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை கூறி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தார். இறுதியாக அவர் பாடிய பெத்தவங்க தப்பு இல்ல... மத்தவங்க தப்பு இல்ல என்ற பாடல் அவைரையும் கதிகலங்க வைத்துவிட்டது.

மதுமிதா
இதையடுத்து, மதுமிதா தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். தமிழ் தெரியாமல் அவர் பேசிய பல வார்த்தைகள் அழகாக இருந்தது. அவருக்கு பலரும் லைக்குகளை கொடுத்தனர்.

கண்ணீர் சிந்திய பவானி
இதையடுத்து, மதுமிதாவிடம் ஏன் இதை சொல்லனுமா அதை சொல்லனுமானு நினைக்கிற எல்லாத்தையும் மனம் திறந்து பேசு என்றார் பாவனி ரெட்டி. தொடர்ந்து பேசிய அவர், திருமணமான ஏழே மாதத்தில் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றார். என் கணவர் இறந்தபோது நான் ஷாக்காகி அப்படியே உட்கார்ந்து விட்டேன். அந்த நேரத்தில் என்னால் அழகூட முடிவில்லை என்றார். எனக்கு பெரிய ஹீரோயின் ஆகனும்னு ஆசை எல்லாம் இல்லை ஆனால் நிம்மதியா வாழனும் என்று கண்ணீருடன் கூறினார் பாவனி.

அங்கீகாரம்
பிக் பாஸ் சீசன் 5ல் நிகழ்ச்சியில் எல்லாமே புதுமுகங்களான இருக்கே நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்குமே என்ற எண்ணிய ரசிகர்கள் இன்று கண்ணீரில் நீந்தினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக மூன்றாம் பாலினத்தவருக்கு பிக் பாஸ் இல்லம் ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











