Don't Miss!
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நண்பர்களா... காதலர்களா... ரசிகர்களை தொடர்ந்து குழப்பத்திலேயே வைத்திருக்கும் பிக்பாஸ் ஜோடி
சென்னை : விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை தாண்டி தற்போது பிக் பாஸ் அல்ட்டிமேட்டாக நடைபெற்று வருகிறது.
போட்டியாளர்களிடையே சண்டைகள், சச்சரவுகள், ரொமான்ஸ் என அடுத்தடுத்த நிகழ்வுகளை புகுத்தி ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறது இந்த நிகழ்ச்சி.
கடந்த 5வது சீசனில் ஹாட் டாப்பிக்காக இருந்த பாவ்னி -அமீர் காதல் விவகாரத்தில் தொடர்ந்து ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.
'கிஸ்' பண்ணும்போது பாவனி ஏன் கோவப்படல… இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது… கடுப்பான அமீர் !

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி
தொடர்ந்து சிறப்பான நிகழ்ச்சிகளால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது விஜய் டிவி. பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நீயா நானா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகிறது. இதனால் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சேனலாக உள்ளது.

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ
குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 5 சீசன்களை கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 3ம் தேதி துவங்கி ஜனவரி 16ம் தேதிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கட்டிப் போட்டது. தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் 5வது சீசன்
பிக் பாஸ் 5வது சீசனில் மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, இசைவானி, பாவ்னி ரெட்டி உள்ளிட்ட 18 நேரடி போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்தனர்.

அமீர் -பாவ்னி காதல்?
இந்த சீசனில் சர்ச்சைக்குரிய விஷயமாக அபிநய் -பாவ்னியில் காதல் இருந்தது. இதை அபிநய் மறுத்த நிலையில் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அமீர், பாவ்னியுடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

நண்பர்கள் என விளக்கம்
பாவ்னியை காதலிப்பதாக தெரிவித்த அமீர், ஒரு சமயத்தில் அவருக்கு முத்தத்தை கொடுத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இவர்கள் காதல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்கான நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர்கள் இருவரும் தாங்கள் நண்பர்கள் என்றே மெயின்டெயின் செய்து வருகிறார்கள்.

புதிய புகைப்படம் பகிர்வு
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் வெளியில் சென்றுள்ள போட்டோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் நண்பர்களா காதலர்களா என்ற குழப்பத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
Recommended Video

குழப்பத்தில் ரசிகர்கள்
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அழகு தங்கம் மற்றும் செல்லக்குட்டியின் செல்பி என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைப் பிரயோகம் ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது. இவர்கள் தங்களின் ரிலேஷன்ஷிப்பை பத்தி சீக்கிரத்துல வெளிப்படுத்திட்டா அடுத்த வேலையை பார்க்கலாம்.