அமீர் காலுக்கு என்ன ஆச்சு? திடீரென பாவனி போட்ட ட்வீட்.. பதறிப் போன பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனிக்கும் ஜெமினி கணேசன் பேரனான அபிநய்க்கும் இடையே காதல் மலருமா? மலராதா? என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்து பாவனியின் மனதில் இடம் பிடித்து விட்டார் அமீர்.

Recommended Video

Pavani போட்ட Tweet... பதறிப் போன Bigg boss ரசிகர்கள்! என்ன ஆச்சு? * TV

நடன இயக்குநரான அமீர் பிக் பாஸ் சீசன் 5ல் பாவனியின் பக்தனாக அவரை சுற்றி சுற்றி வந்த நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடிகளாக போட்டு ராஜூவையும் பிரியங்காவையும் தொகுப்பாளர்களாக வைத்து அடுத்த அட்டகாசத்தை விஜய் டிவி ஆரம்பித்தது.

சமீபத்தில், பாவனிக்கும் அமீருக்கும் விஜய் டிவி மேடையிலேயே திருமண தீம் வைத்து திருமணத்தையும் செய்து வைத்து விட்டனர்.

லவ் டார்ச்சர்

லவ் டார்ச்சர்

பிக் பாஸ் வீட்டிலேயே அமீரை தம்பி என அழைத்து வந்த பாவனியை தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து, அத்துமீறி முத்தமெல்லாம் கொடுத்து மினி விண்ணைத் தாண்டி வருவாயா படத்தையே அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடத்தினார். அமீர் தொடர்ந்து தனது காதலை சொல்லி பாவனியை கரெக்ட் செய்து விட வேண்டும் என நினைத்து வந்த நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 அதற்கு தொக்காக அமைந்தது.

ரீல் ஜோடியா ரியல் ஜோடியா

ரீல் ஜோடியா ரியல் ஜோடியா

அமீர் மற்றும் பாவனி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனரா? அல்லது நிகழ்சிக்காக ஜோடிகளாக நடிக்கின்றனரா என்கிற குழப்பத்திலேயே ரசிகர்கள் காதல் பரத் போல இன்னமும் சுற்றித் திரிகின்றனர். ஆனால், அந்த இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2விற்காக ஜோடி போட்டு நடனமாடி அசத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டிவியிலேயே திருமணம்

டிவியிலேயே திருமணம்

தனியாக திருமணம் செய்து கொண்டு ஓடிடியில் ரிலீஸ் செய்வதை விட, டைரக்டா டிவியிலேயே தங்களது திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்தார்களா என்னவோ தெரியவில்லை. திருமண தீமை நடன நிகழ்ச்சியில் கொண்டு வந்து அமீருக்கும் பாவனிக்கும் கோலாகலமாக ரீல் திருமணத்தை நடத்தி வைத்து விட்டனர். அதன் புகைப்படங்கள் முதலில் தீயாக கசிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

அமீர் காலுக்கு என்னாச்சு

அமீர் காலுக்கு என்னாச்சு

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீர் கால் பிரச்சனையாகவே இருந்தது. இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரொம்பவே சிரமப்பட்டு தொடர்ந்து கஷ்டமான ஸ்டெப்புகளை கொரியோகிராஃப் செய்து நடனமாடி வந்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமீர் காலில் பிரச்சனை இருந்ததாகவும், அதையும் தாண்டி அவர் நடனமாடினார் என தற்போது பாவனி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

இதனால் தான் லவ் பண்றாங்க

இதனால் தான் லவ் பண்றாங்க

ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் அமீர் ரெஸ்ட் எடுத்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் எழுந்து நிற்கும் உன் மனசுக்குத்தான் உன்னை எல்லாரும் லவ் பண்றாங்க என பதிவிட்ட நிலையில், மறைமுகமாக தனது காதலையும் பாவனி வெளிப்படுத்தி உள்ளாரா? என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர். திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும், மருத்துவ ரிப்போர்ட்டையும் ஷேர் செய்துள்ளார் பாவனி.

டேக் கேர் அமீர்

டேக் கேர் அமீர்

பாவனி இப்படியொரு ட்வீட்டை போட, அமீரின் முயற்சி ரொம்பவே பெரிய விஷயம். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பர்ஃபார்மன்ஸை தரமா செய்யுங்க என ரசிகர்கள் டேக் கேர் அமீர் என போட்டு வருகின்றனர். பாவனியின் இந்த திடீர் ட்வீட் காரணமாக இருவரும் இனி தொடர்ந்து ஆட மாட்டார்களா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X