வெரி ராங் அபிநய்.. திடீரென சீறிய பாவனி.. ஜெமினி கணேசன் பேரனை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாங்களே!

சென்னை: ஜெமினி கணேசன் பேரன் அபிநய்யை மூன்றாவது புரமோவில் டோட்டல் டேமேஜ் செய்துவிட்டார் பாவனி ரெட்டி.

Recommended Video

கணவர் கூட சண்டைன்னு சொல்றாங்க! வருத்தப்பட்ட பேசிய Mettioli Bhavani

இதுவரை அழுத பிள்ளையாக நடித்து ஏமாற்றிய பாவனி ரெட்டி திடீரென ஆக்ரோஷ மோடுக்கு மாறி அட்டாக் செய்துள்ள அதிரடி புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஒரு புரமோ கூட உருப்படாத புரமோவாக வந்து கொண்டிருந்த நிலையில், இன்றைய மூன்று புரமோக்களும் தீபாவளி பட்டாசுகளாக வெடித்து சிதறி சர்வைவர் பக்கம் போனவர்களை மீண்டும் பிக் பாஸ் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அபிஷேக் அட்டகாசம்

அபிஷேக் அட்டகாசம்

இன்றைய பிக் பாஸ் முதல் புரமோவில் பிரியங்காவுடன் பழகினால் தான் கேமராவில் தெரிவேன் என அபிஷேக் தரம் தாழ்ந்து பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கோபப்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த பிக் பாஸ் போல இந்த சீசன் இருக்கப் போவது இல்லை என்றும் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போட்டியாளர்கள் போவார்கள் என்றும் தெரியப்படுத்தி விட்டது.

சுருதியின் உறுதி

சுருதியின் உறுதி

பிக் பாஸ் வீட்டில் இன்ஃப்ளூயன்ஸ் நடக்குது என்பதை தெளிவாகவும் தைரியமாகவும் தனது கருத்தை உறுதியாக கேமராவில் பதிவு செய்து இரண்டாவது புரமோவில் சுருதி அதிரடி காட்டியது ரசிகர்கள் மத்தியில் அவருக்கான நல்ல மதிப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பச்சோந்தி பாவனி

பச்சோந்தி பாவனி

இதுவரை அழுகாச்சி பாவனியாக இருந்து வந்தவர் இன்றைய மூன்றாவது புரமோவில் ஆக்ரோஷ பாவனியாக மாறி அபிநய்யின் சுயரூபத்தை அத்தனை போட்டியாளர்கள் முன்பாகவும் போட்டு உடைத்திருப்பது ரசிகர்களுக்கு செம ஷாக்கிங்காக மாறி உள்ளது. இதுவரை இரண்டு பேரும் நல்லா தானே பேசிட்டு இருந்தீங்க ஏன் இப்போ திடீர்னு வருண் பக்கம் சாய்றீங்க பாவனி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டோட்டல் டேமேஜ்

டோட்டல் டேமேஜ்

பாவனி ரெட்டி தன்னிடம் நல்லா சிரித்து சிரித்து ரகசியமாக பேசுகிறாள் என வருண் உள்ளிட்ட போட்டியாளர்கள் பற்றி பேசியதை எல்லாம் பொதுவெளியில் போட்டு விளாசி ஜெமினி கணேசன் பேரன் அபிநயை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் பாவனி ரெட்டி.

வொர்க்கவுட் ஆகலையா

வொர்க்கவுட் ஆகலையா

பாவனி ரெட்டி அபிநய் உடன் நெருங்கி பழகிய நிலையில், அபிநய் அவரை விட்டு விலகி சென்றதன் காரணம் தான் இப்படி பாவனிர் ரெட்டி அதிரடியாக அவர் மீது பாய காரணமா? என்கிற கேள்வியையும் பிக் பாஸ் ரசிகர்கள் எடுத்து வைத்து வருகின்றனர்.

ரொம்ப விஷம்

ரொம்ப விஷம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நாடிய சங் சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே பாவனி ரெட்டி ஒரு விஷ பாட்டில் என சொன்ன நிலையில், அபிநய்க்கும் இப்போ பாவனி பற்றிய உண்மை புரிந்திருக்கும் என்றும் இதற்கு மேல் பாவனி பின்னாடி அபிநய் செல்ல மாட்டார் என்றும் இனி வருண் பாவனி வலையில் சிக்குவாரா? மாட்டாரா? என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய இடத்து பிள்ளைகள்

பெரிய இடத்து பிள்ளைகள்

பாவனி ரெட்டி முதலில் பெரிய இடத்து பிள்ளையான ஜெமினி கணேசன் பேரன் அபிநய் உடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். இப்போ அபிநய்யை கழட்டி விட்டுவிட்டு அடுத்த பெரிய இடத்து பிள்ளையான வருணுடன் பழக அபிநயை வெரி ராங் என முகத்துக்கு நேராக வெளுத்து விடுவது போல பேசி உள்ளாரே என்றும் கேள்விகள் சமூக வலைதளங்களில் கிளம்பி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X