மூஞ்சிக்கு நேரா பேசுங்க.. அக்‌ஷராவையும் விடாது வம்பிழுத்த பாவனி.. என்ன தான் ஆச்சுன்னு தெரியலையே?

சென்னை: நள்ளிரவு நேரத்தில் பெட்ரூமில் இருந்தபடியே அக்‌ஷராவுடன் பாவனி ரெட்டியை சண்டையை ஆரம்பித்தது பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

என்னடா சண்டையே இல்லாமல் பிக் பாஸ் வீடு போரடிக்குதேன்னு பார்த்தால் ஆளாளுக்கு சண்டை போட ஆர்டர் வந்தது போல சண்டைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

மூஞ்சிக்கு நேரா பேசுங்க மற்றும் பின்னாடி பேசாதீங்க (அதே டயலாக்) போன்ற வசனங்களை அக்‌ஷராவிடமும் பாவனி பயன்படுத்தி உள்ளார். (நல்ல வேளை இதை கட் பண்ணல).

பஞ்சாயத்து பாவனி

பஞ்சாயத்து பாவனி

பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் ரசிகர்கள் பஞ்சாயத்து பாவனி என புதிய பட்டப்பெயரையே வைத்து அழைத்து வருகின்றனர். மூன்றாவது புரமோவில் பாவனி ரெட்டி அபிநய் பற்றி பேசிய அதே வார்த்தைகளை அக்‌ஷராவிடமும் அவர் பயன்படுத்தி இருப்பது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஏதாவது பிரச்சனையா

ஏதாவது பிரச்சனையா

படுக்கையறையில் எதிர் பெட்டில் அமர்ந்திருந்த அக்‌ஷராவை அழைத்து பேசிய பாவனி உனக்கு ஏதாவது பிரச்சனையா என பஞ்சாயத்தை ஆரம்பித்தார். ஒன்றும் இல்லையே என அக்‌ஷரா அமைதியாக பதில் அளிக்க உனக்கு ஏதாவது சொல்லணும்னா நேரடியா சொல்லு என சீரத் தொடங்கினார்.

மூஞ்சிக்கு நேரா

மூஞ்சிக்கு நேரா

பின்னாடி பேசுறதை விட்டு விடு அக்‌ஷரா எதுவாக இருந்தாலும் மூஞ்சிக்கு நேராக பேசு என பாவனி சொன்ன அடுத்த கணமே சூடாக ஆரம்பித்து விட்டார் அக்‌ஷரா. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்க இதைத் தான் எதிர்பார்த்தோம் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அபிநய் தான் காரணம்

அபிநய் தான் காரணம்

அக்‌ஷராவுக்கும் பாவனிக்கும் இடையே சண்டை நடக்கவும் அபிநய் தான் காரணம் என பாவனி ஓப்பனாக போட்டு உடைத்து விட்டார். பாவனி அப்படி குரலை உசத்திப் அபிநய் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் போதும் அபிநய் அப்படியே பொட்டிப் பாம்பை அடங்க காரணம் என்ன? என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அக்‌ஷரா தான் டார்கெட்

அக்‌ஷரா தான் டார்கெட்

பிரியங்கா மற்றும் பாவனிக்கு டஃப் போட்டியாளராக தெரியும் அக்‌ஷரா தான் அவர்களது டார்கெட்டாக உள்ளது. அக்‌ஷராவிடம் இருக்கும் அந்த காயினை எப்படியாவது கண்டுபிடித்து திருட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஏகப்பட்ட சண்டைகளை பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப் போட்டு வருகின்றனர். பர்சனல் பகையும் பிரியங்காவுக்கும் அக்‌ஷராவுக்கும் இடையே இருப்பது ஒவ்வொரு எபிசோடிலும் தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X