வீட்டை விட்டு வெளியேற கதவை திறந்து வைக்கட்டா என கேட்ட கமல்.. பதறிப் போய் பல்டி அடித்த பாவனி!
சென்னை: ஞாயிற்றுக் கிழமை எபிசோடு ஆரம்பிக்கும் முன்னதாக தாமரை மற்றும் பாவனி தனியாக புலம்பும் காட்சிகள் ஒளிபரப்பாகின.
கமல் வந்ததும் முதல் பஞ்சாயத்தாக பாவனி மற்றும் தாமரை தனியாக கார்டன் ஏரியாவில் என்ன பேசிக் கொண்டனர் என்பதையே கேட்டு நிகழ்ச்சியை பரபரப்பாக ஆரம்பித்தார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து யாருக்காவது வெளியேற விருப்பம் இருந்தால் சொல்லுங்க கொஞ்ச நேரம் கதவை திறந்து வைக்கிறேன் என கதிகலங்க வைத்து விட்டார்.

தாமரை பாவனி புலம்பல்
இந்த கேமை எப்படித்தான் விளையாடுறது என தெரியலையேப்பா என தாமரையிடம் பாவனி புலம்பினார். இந்த வீட்டில் இதற்கு மேல் இருந்தால் கொலை வெறியில் ந்ம் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்து விடுவார்கள், இனி வீட்டிலேயே இருக்கக் கூடாது என இந்த வாரம் இருவரில் ஒருவர் எவிக்ட் ஆகி வெளியே போவது குறித்து பேசினார்கள்.

கதவை திறந்தால் போயிடுவேன்
இப்ப கூட கதவை திறந்து விட்டா அப்படியே வெளியே போயிடுவேன் என பாவனி கேம் விளையாடவே பிடிக்காத மைண்ட் செட் உடன் பேசிய வார்த்தைகளை கேட்ட கமல் உள்ளே நுழைந்ததும் முதலில் இது தொடர்பான பஞ்சாயத்தை பேச ஆரம்பித்து விட்டார்.

கமல் கேள்வி
கார்டன் ஏரியாவில் சற்று முன்னர் என்ன பேசிக் கொண்டிருந்தீங்க என கமல் தாமரை மற்றும் பாவனியை பார்த்து கேள்வி கேட்க கடைசியா பேசினதை கூட கண்டுபிடிச்சி முதல் ஆடாக நம்மை பலி கொடுக்க பார்த்து விட்டாரே கமல் என பாவனி மற்றும் பிரியங்கா அசடு வழிய ஆரம்பித்தனர்.

கதவை திறக்கட்டா
பாவனியின் பேச்சை கேட்டு கடுப்பான கமல் செம போல்டாக விளையாட போறேன் என் ஆட்டத்தை பார்க்க போறீங்க என கடந்த வாரம் சொன்ன பாவனி வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறாரே.. என நினைத்து கொஞ்சம் நேரம் கதவை திறந்து வைக்கிறேன் யாராவது வெளியே வர விரும்புறீங்களா எனக் கேட்டு தாமரை மற்றும் பாவனியின் பெயர்களை அழுத்திச் சொன்னார் கமல்.

பல்டி அடித்த பாவனி
தாமரையிடம் இப்போ கதவை திறந்து விட்டாலும் வெளியே போயிடுவேன்னு சொன்ன பாவனி கமல் கேட்டவுடன் வேண்டாம் சார் வெளியேற விருப்பமில்லை என அந்தர் பல்டி அடித்து விட்டார். ஏற்கனவே பிரியங்காவிடம் உதவி கேட்டு விட்டு பின்னர் கமல் முன்னிலையில், பிரியங்கா சொல்லும் போது நான் எப்போ உன்னிடம் உதவி கேட்டேன் என பாவனி சொன்னதை போலவே இந்த முறையும் வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்.

பணப்பெட்டியை தூக்குவாரா?
பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் தனக்கு கிடைக்காது என உறுதியாக தெரிந்து விட்டதை போலவே கேம் விளையாடுவதில் இருந்து விலகி விடலாம் என்கிற மன நிலையிலேயே பாவனி உள்ளார். கடந்த சீசனில் கேபி பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடியதை போலவே பாவனியும் சூட்கேஸை தூக்குவாரா? என வெயிட் பண்ணி பார்ப்போம். டாப் 5ல் இடம்பெற்றதால் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











