பிக் பாஸ் வரலாற்றிலேயே பக்காவான குறும்படம்.. பாவனி மற்றும் அபிநயை கிழித்துத் தொங்க விட்ட கமல்!
சென்னை: பாவனி மற்றும் அபிநய் பஞ்சாயத்தில் ராஜு மற்றும் பிரியங்காவை விளாசி தள்ளிய கமல் அதே சாட்டையை அப்படியே பாவனி மற்றும் அபிநய் பக்கம் திருப்பியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு பாவனிக்கு போட்ட குறும்படம் இருந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாவனிக்கு பிடிக்கவில்லை என பலமுறை சொல்லியும் அபிநய் பின்னாடியே வந்து அமர்வதால் தான் அவருடன் பேசுகிறேன் என பாவனி சொல்லியும் அபிநய் பாவனி மேல் கோபப்படாமல் இருப்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

ஆந்தாலஜி
பாவனிக்கு அப்படி என்ன குறும்படத்தை கமல் போடப் போகிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க ஏகப்பட்ட சின்ன சின்ன குறும்படங்களை சேர்த்து ஒரு ஆந்தாலஜியாகவே போட்டு விட்டார் கமல்ஹாசன். அமீருடன் பாவனி பேசியது, ராஜுவுடன் பாவனி பேசியது, அபிநய் தனியாக பேசியது என பல க்ளிப்களை போட்டுக் காட்டி பாவனி மற்றும் அபிநயை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்.

ஓப்பனாக கேட்ட அமீர்
ராஜுவுக்கு மட்டுமல்ல வீட்டில் உள்ள பலருக்கும் அந்த டவுட் வர காரணமே அபிநய் நடந்து கொள்ளும் விதம் தான் என்றும் உனக்கு எப்படி தோன்றுகிறது என அமீர் அபிநய் பற்றி பாவனியிடம் ஓப்பனாக பேசிய காட்சிகளை குறும்படமாக போட்டு காட்டினார் கமல். அதற்கு பதில் அளித்த பாவனி எனக்கும் அதே டவுட்டு இருக்கு அமீருடன் பேசிய காட்சிகள் போட்டு காண்பிக்கப்பட்டன.

குளிக்கப் போறேன்
என்ன பத்தி பேச நீயாரு என ராஜுவை பார்த்து அந்த கேள்வி கேட்ட பாவனி எனக்கும் உங்களுக்கு இருக்குற அதே டவுட் இருக்கு ராஜு என ராஜுவிடம் தானாகவே முன் வந்து பேச, இந்த விஷயத்தில் இதற்கு மேல் தேவையில்லாமல் பேச வேண்டாம் என நினைத்த ராஜு வழக்கம் போல குளிக்கப் போறேன் என எஸ்கேப் ஆனது ரசிகர்களை குறும்படத்திலும் சிரிக்க வைத்தது.

பின்னாடியே வரான்
பிடிக்க வில்லை என முகத்திற்கு நேராக சொல்லியும் திரும்ப திரும்ப அபிநய் பின்னாடியே வந்து எங்கே போனாலும் அங்கே வந்து உட்கார்ந்து கொள்கிறான் என பாவனி அபிநய் பற்றி பேசிய காட்சிகளை போட்டுக் காட்டிய பின்னரும் அபிநய்க்கு பாவனி மீது கோபம் வராமல் போனது ஒட்டுமொத்த ரசிகர்களை மறுபடியும் குழப்புவது போலவே உள்ளது.

கமல் பொளேர்
எனக்கு என்னம்மோ இந்த வீட்டை மிஸ் லீடு பண்ணிட்டீங்களோ.. உங்க மேல வராம திசை திருப்பி விட்டுட்டீங்களோ என அபிநய்க்கு எதிராகவும் எனக்கே புரியல பிளேயிங் சேஃப்னு பார்த்தா இவங்க ரெண்டு பேரு பண்றது தான் பிளேயிங் சேஃப் என கமல் பாவனி மற்றும் அபிநய்க்கு பொளேர் விட்டுள்ளார்.

பிரியங்கா உட்காருங்க
சும்மா இருந்த பாவனியை உசுப்பேற்றி விட்டு இப்போ அவருக்கு குறும்படம் போட்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கெட்டப் பெயரை வாங்கி கொடுத்து விட்டு மீண்டும் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க முயன்ற பிரியங்காவை கமல் பிரியங்கா உட்காருங்க என அதட்டி ஆஃப் செய்தது வேற லெவல்.

அக்ஷரா ஆறுதல்
பாவனி உடன் பிரச்சனை வந்து விட்டது. கமல் சாரே சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லிட்டாரு என நினைத்த அபிநய் நேரா அக்ஷராவை கட்டிப்பிடித்து அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டார். அக்ஷரா உஷாரா அண்ணன் என்று சொல்லியே ஆறுதல் சொல்லி எந்தவொரு மிஸ் லீடிங்கிற்கும் இடம் கொடுக்காமல் நடந்து கொண்டதை போல பாவனி நடந்திருந்தால் இந்த பஞ்சாயத்தே நடந்திருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











