தனுஷ் அக்கா மகன் பவீஷ்ஷின் அடுத்த படம் ரெடி.. டைட்டிலே தரமா இருக்கேப்பா.. லவ்வோ லவ்வு டீசர் ரிலீஸ்

சென்னை: 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவீஷ் நாராயண். கிட்டத்தட்ட தனது எதார்த்தமான நடிப்பால் 'மிகவும் நம்பிக்கைக்குரிய அறிமுக நடிகர்' விருதையும் வென்ற பவீஷ், தற்போது தனது அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார். இதனால் படம் பெரிதும் பேசுபொருளானது.

பவீஷ் நாராயண் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களில் ஒருவர். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த முதல் படம் பலரது பாராட்டுகளையும் பெற்று பெரிதும் வெற்றிகளை ஈட்டி உள்ளது. எதார்த்தமான இவரது நடிப்பு, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

மிரட்டலான கூட்டணி: இப்படி இருக்கையில், பவீஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'லவ்வோ லவ்வு' (Love Oh Love) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பவீஷ் நாராயணுக்கு ஜோடியாக நாக துர்கா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இளமைத் துடிப்புடன் இருக்கும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் 'பாக்ஸ்ன்' இசையமைத்துள்ளார். தனது நேர்த்தியான கேமரா கோணங்களால் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் பி.ஜி. முத்தையா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஸ்வத், சௌந்தர்யா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

Pavish Narayan s Love Oh Love Teaser Goes Viral Star-Studded Cast Raises Expectations

டீசர் எப்படி இருக்கு? காதலும் எமோஷனும்: படத்தின் அதிகாரப்பூர்வ மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தற்போதைய சூழலில், இந்த டீசர் காதலும் எமோஷனும் கலந்த ஒரு கலகலப்பான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பவீஷ் நாராயணின் துடிப்பான நடிப்பும், செல்வராகவன் - கே.எஸ். ரவிகுமார் ஆகியோரின் காம்போவும் டீசரின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் டிரைலரில் (டீசரில்) பவீஷ் நாராயண் மிகவும் துடிப்பாக இருப்பதுடன், காதலும் எமோஷனும் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு உருவாக்கும் விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னணி நட்சத்திரங்கள் பலரின் வாழ்த்துகளோடு வெளியாகியிருக்கும் இந்த டீசர், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், படத்தின் மீதான ஆவலான கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X