இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்ஸ்... பவித்ர லட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு

சென்னை : மாடலும் நடிகையுமான பவித்ர லட்சுமி, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட இவர், அடிக்கடி கவர்ச்சிகரமாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி இவர் வெளியிடும் ஃபோட்டோக்கள் பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்து மீடியாக்களின் கவனத்தை தன் பக்கத்தில் ஈர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் பவித்ர லட்சுமி.

Pavithra lakshmi gets 1 million followers in instagram

சமீபத்தில் தனது செல்ல நாய்க்கு முதல் பிறந்தநாளை கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் எபிசோட்டில் நடிகர் சுதர்சன் கோவிந்த்தை அழைத்து வந்து அடுத்த பரபரப்பை கிளப்பினார். எதற்காக அவரை அழைத்து வந்தார் என பல்வேறு விதமாக செய்திகள் பரவியதை அடுத்து, அதற்கு விளக்கம் அளித்தார் பவித்ர லட்சுமி.

கடந்த 2 நாட்களுக்கு முன் சுதர்சன் கோவிந்த்திற்கும் பவித்ரலட்சுமிக்கும் திருமணம் நடந்தது போன்ற ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவியது. இது பலவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், பிறகு அது டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கான சூட்டிங் நடந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பவித்ர லட்சுமியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பவித்ர லட்சுமி. அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஒரு மில்லியன் அன்பிற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கும் எப்போதும் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து என்னை போன்று வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X