twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை பவித்ரா லட்சுமி… நடிகர் சஞ்சீவ்… தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்!

    |

    சென்னை : குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    ரஜினிகாந்த், அருண்விஜய், சிம்ரன்,காஜல் அகர்வால், சாக்ஷி,நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

    பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்.. வரவேற்கும் சினிமா நட்சத்திரங்கள்!பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்.. வரவேற்கும் சினிமா நட்சத்திரங்கள்!

    இவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனர்.

    மிகவும் கடுமையாக

    மிகவும் கடுமையாக

    கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    முதலில் தடுப்பூசி

    முதலில் தடுப்பூசி

    முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி போட்டுக்கொண்டார்

    தடுப்பூசி போட்டுக்கொண்டார்

    இதேபோல பல திரைப்பிரபலங்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் இது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறது. அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

    முதல் டோஸ் தடுப்பூசி

    முதல் டோஸ் தடுப்பூசி

    குக்வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஊசி மருந்து என்றால் எனக்கு பயம், நான் மிகவும் பயப்படுகிறேன். ஆனாலும் நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

    விழிப்புணர்வு தேவை

    விழிப்புணர்வு தேவை

    மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள போதிய விழிப்புணர்வினை அரசு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தான் ஊரடங்கு கட்டுபாட்டில் இருந்து மக்கள் விடுபட முடியும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

    English summary
    Pavithra Lakshmi, Sanjeev receive Covid-19 vaccination
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X