10 ஆளுக்கு இருக்கும் எனர்ஜி.. என்னால முடியாதுப்பா.. ஓபனாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி!
சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரர்தான் நரேஷ் பாபு. இவர் தனது அறுபதாவது வயதில் பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது பவித்ரா, நரேஷின் பிறந்த நாள் விழாவில் பேசியதை, இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகர் நரேஷ் பாபு இவர், தெலுங்கு மட்டுமில்லாமல், இந்தியிலும், தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் டான்ஸ் மாஸ்டரின் மகளை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, இரண்டாவதாக ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். பின் அவரையும் பிரிந்தார்.

50வது வயதில் 3வது திருமணம்: 50வது வயதில் 30 வயதே ஆன ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடனும் சேர்ந்து வாழவில்லை. இப்படி மூன்று முறை திருமணம் செய்து கொண்ட நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். 60வது வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகை பவித்ராவுக்கு இது இரண்டாவது திருமணமாகும்
ரொம்ப நல்ல மனிதர்: இந்நிலையில் நரேஷ் பாபுவின் பிறந்தநாள் விழாவில் பேசிய பவித்ரா லோகேஷ், அவரின் பிறந்தநாளில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அவர் அனைவருக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கக்கூடிய நபர். அவர் இவ்வளவு பெரிய நடிகரான போதும், குருவிற்கு மரியாதை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். ஏதாவது ஒரு காட்சியில் நடிப்பதற்கு சிரமமாக இருந்தது என்றால், உடனே குருவை நினைத்துக் கொண்டால், அந்த காட்சி ஈஸியாக முடிந்து விடும் என்று பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார் அந்த அளவுக்கு குரு மீது இவர் வைத்து இருக்கும் மரியாதையை பார்த்து நான் வியந்து போனேன்.

10 ஆளின் எனர்ஜி: தினமும் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து குளித்து முடித்துவிட்டு சாமி அறையில் பூஜை செய்துவிட்டு தான் அனைத்து வேலைகளிலும் தொடங்குவார். ஷூட்டிங் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் அதை தவறாமல் செய்துவிடுவார். அதே போல தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து விஷயத்தையும் அவர் மெனக்கட்டு செய்யக்கூடிய ஒருவர். அவர் சாதாரண மனுஷனே இல்லை, அவருக்கு 10 ஆட்களின் எனர்ஜி இருக்கிறது. என்னால் அதை செய்ய முடியாதுப்பா. எந்த வேலை எடுத்தாலும் அதை சரியாக முடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. அதுதான் இவருடைய வெற்றிக்கு காரணம் என்று, பிறந்தநாள் விழாவில் பவித்ரா லோகேஷ் பேசி இருந்தார். இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் ஓ எனர்ஜியா என கேட்டு பல விதமான கமெண்ட்களை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











