எனக்கு ஊசின்னா ரொம்ப பயம்...வைரலாகும் பவித்ரலட்சுமி ஃபோட்டோ
சென்னை : கொரோனா இரண்டாம் அலையின் தீவிரமும், அதன் ஏற்படும் உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மற்றவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகள், கொரோனா நிவாரண நிதி அளிப்பது, மருத்துவ உதவி மேற்கொள்வது என பலரும் சமூக பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரலட்சுமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த ஃபோட்டோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,"ஊசின்னா எனக்கு ரொம்ப காலமாகவே பயம். நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன். ஆனா ஒரு வழியாக தடுப்பூசி போட்டுட்டேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
பவித்ர லட்சுமியின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இதனை அவர் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பிரபல மாடலான பவித்ரலட்சுமி அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி தான் பரபரப்பை கிளப்புவார். இன்று இவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோவும் வைரலாகி வருகிறது. பவித்ரலட்சுமி தற்போது காமெடியன் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











