ப்ளான் பண்ணித்தான் இரண்டாவது திருமணம் - நடிகையின் முதல் கணவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

பெங்களூரு: பவித்ரா லோகேஷ் ப்ளான் பண்ணித்தான் மகேஷ் பாபுவின் அண்ணனை திருமணம் செய்திருக்கிறார் என அவரது முதல் கணவர் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. நரேஷ் பாபுவும் ஒரு நடிகர்தான். தெலுங்கு மொழியில் பல படங்களிலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

நரேஷ் பாபுவின் திருமணங்கள்

நரேஷ் பாபுவின் திருமணங்கள்

நரேஷ் பாபு முதல்முதலாக மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு.

50 வயதில் மூன்றாவது திருமணம்

50 வயதில் மூன்றாவது திருமணம்

சூழல் இப்படி இருக்க தனது 50ஆவது வயதில் மூன்றாவது திருமணம் செய்ய முடிவெடுத்து ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யாவுக்கும், நரேஷுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்தார்.

நரேஷ் பாபு செய்துகொண்ட நான்காவது திருமணம்

நரேஷ் பாபு செய்துகொண்ட நான்காவது திருமணம்

கன்னட நடிகையான பவித்ரா லோகேஷை காதலிப்பதாக நரேஷ் பாபு அறிவித்தார். மேலும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் லிவிங் டூகெதராகவும் அவர்கள் வசித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. அதனை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் புத்தாண்டன்று முத்தம் கொடுத்தபடி வீடியோவையும் இரண்டு பேரும் வெளியிட்டிருந்தனர்.

நடிகையின் மீது முதல் கணவரின் குற்றச்சாட்டு

நடிகையின் மீது முதல் கணவரின் குற்றச்சாட்டு

இந்நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுசேந்திர பிரசாத் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். அதில், "பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர். அதற்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமாக ப்ளான் செய்திருக்கிறார்.

எல்லாம் சொத்துக்காகத்தான் செய்கிறார் பவித்ரா

எல்லாம் சொத்துக்காகத்தான் செய்கிறார் பவித்ரா

நரேஷின் 1500 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக இந்தத் திருமண நாடகத்தை தொடங்கியிருக்கிறார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா லோகேஷ். அது நரேஷுக்கு இன்னமும் புரியவில்லை. என்றாவது ஒருநாள் பவித்ராவின் இந்த நாடகத்தை நரேஷ் கட்டாயம் தெரிந்துகொள்வார்" என்றார். அவரது இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X