ஓட்டல் அதிபரை திருமணம் செய்து ஏமாற்றினாரா? என்ன சொல்கிறார் பிரபல பிக் பாஸ் நடிகை?
மும்பை: ஓட்டல் அதிபரை திருமணம் செய்து ஏமாற்றியதாக வந்த புகார் குறித்து, பிரபல பிக் பாஸ் நடிகை பதில் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை பவித்ரா புனியா. சில படங்களில் நடித்துள்ள இவர், பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இப்போது நடக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இவர், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

நான்கு முறை
இந்நிலையில், நடிகை பவித்ரா புனியாவுக்கும் தனக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்றும் அதை அவர் மறைக்கிறார் என்றும் தன்னை நான்கு முறை ஏமாற்றி விட்டதாகவும் ஓட்டல் அதிபர் சுமித் மகேஸ்வரி என்பவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

தொடர்பில் இருந்தார்
அவர் கூறும்போது, நடிகை பவித்ரா புனியாவுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு திருமணம் செய்துகொண்டோம். திருமணம் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று பவித்ரா சொன்னதால், அறிவிக்கவில்லை. ஆனால், அவர் வேறு சிலருடன் தொடர்பில் இருந்தார்.

அதுவரை காத்திருங்கள்
நடிகர் பரஸ் சப்பாரியாவும் பவித்ராவுடன் தொடர்பில் இருந்ததை அவர் செல்போன் மூலம் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு நடிகர் பரஸுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதில், நாங்கள் இன்னும் விவாகரத்து செய்ய வில்லை. அதுவரை காத்திருங்கள். இதில் என் குடும்பமும் சம்பந்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தேன்.

மெசேஜ் உண்மைதான்
திருமண நாளை கொண்டாடுவதற்கு நாங்கள் கோவா சென்றோம். அங்கு ஓட்டலில் இருந்தபோது, அதே ஓட்டலில் நடிகர் பரஸும் இருந்தார். இதுபோன்ற அவமானங்களை நான் பலமுறை சந்தித்தேன் என்று கூறியிருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரஸ் அளித்த பேட்டியில், பவித்ராவின் கணவர் தனக்கு மெசேஜ் அனுப்பியது உண்மைதான் என்று கூறியிருந்தார்.

சரியான நேரத்தில்
பவித்ரா பற்றி மேலும் பல திடுக் தகவல்கள் கிடைத்தன என்றும் அதை சொன்னால் அவர் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பரஸ் கூறியிருந்தார். இந்நிலையில், ஓட்டல் அதிபர் சுமித்தின் புகார் பற்றி பவித்ராவிடம் கேட்டபோது, இதுபற்றி இப்போது ஏதும் சொல்ல விரும்பவில்லை. சரியான நேரத்தில் பதிலளிப்பேன்.
Recommended Video

இனிமை நினைவுகள்
இது இப்போது எனக்கு முக்கியத்துவம் இல்லாத ஒன்று. இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த இஜாஸின் நினைவுகளில் இருக்கிறேன். அவர் என்னை எந்தளவுக்கு மிஸ் பண்ணுகிறார் என்பதை இப்போது வீடியோவில் பார்க்கிறேன். அந்த இனிமையான நினைவுகளை, இதுபோன்ற விஷயங்களால் வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











