Amir Pavni: பிக் பாஸ் அமீரை இறுக்கி அணைத்து அப்படியொரு போஸ்.. ‘Mine' என கேப்ஷன் போட்ட பாவனி!
சென்னை: பாவனி மற்றும் அமீர் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில், காதலர்களாக மாறி உள்ளனர். சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பாவனி கலந்து கொண்டார். அதன் பின்னர், வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் பாவனியிடம் நெருங்கி பேசியும் பழகியும் வந்த நிலையில், உண்மையாகவே அவரை காதலிக்க ஆரம்பித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அதில், அமீர் மற்றும் பாவனி ஒன்றாக ஜோடி போட்டு ஆட ஆரம்பித்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர்.
பிக் பாஸில் மலர்ந்த காதல்:
ஏற்கனவே கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது மற்றும் இன்னொரு திருமணம் கடைசி நேரத்தில் தடைப்பட்டு நின்றது போன்றவற்றால் துயரில் இருந்த பாவனிக்கு அமீர் கொடுத்த அன்பும் ஆதரவும் இருவரையும் காதலர்களாக மாற்றியது.
அஜித்தின் துணிவு படத்தில் பாவனிக்கும் அமீருக்கும் திருமணம் ஆவது போன்ற காட்சிகளையும் இயக்குநர் வினோத் வைத்திருந்தார்.

சமீபத்தில் பாவனி கர்ப்பமாக இருக்கிறார் என ரூமர்கள் எல்லாம் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அமீருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
கட்டியணைத்து நெருக்கமாக:
ப்ளூ சட்டை மற்றும் கார்கோ பேன்ட்டில் செம க்யூட்டாக அமீர் அசத்தல் போஸ் கொடுக்க பட்டுச் சேலையில் படு க்யூட்டாக பாவனி போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அமீரை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு படு நெருக்கமாக போஸ் கொடுத்து 'Mine' என்னோட ஆள் என சூப்பராக கேப்ஷனும் கொடுத்து பாவனி தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
செம ஹேப்பியாக அமீர் மற்றும் பாவனி இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்த நிலையில், இருவருக்கும் எப்போ திருமணம் செய்துக் கொள்ளப் போறீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











