வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க... என்ன இப்படி சொல்லிட்டாங்க... அப்ப அவரு?

சென்னை : விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டானது. இதற்கு முக்கியமான காரணமாக பாவ்னி மற்றும் அமீர் இருந்தனர். இவர்களது காதல் கலாட்டாக்களே ஷோவின் வெற்றிக் காரணமாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஷோவாக இருந்து வருகிறன. ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன் விலகல்

கமல்ஹாசன் விலகல்

இந்த நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கமல்ஹாசன், நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கிய நிலையில், தற்போது நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகவும் பிரபலமாக இருந்தது. இதற்கு காரணம் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த நடிகை ஓவியா மற்றும் ஆரவின் காதல்.

தொடரும் காதல் கதை

தொடரும் காதல் கதை

இதேபோல ஒவ்வொரு சீசனிலும் இந்த காதல் கதைகள் தொடர்ந்தன. இந்த காதல் ஜோடிகள் மற்றும் அவர்களிடையே காணப்பட்ட கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றை கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றியாக்கியது விஜய் டிவி. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இதேபோல காதல் அரங்கேறியது.

பாவ்னி -அமீர் காதல்கதை

பாவ்னி -அமீர் காதல்கதை

பாவ்னி மற்றும் அமீர் இடையிலான காதல் கலாட்டக்கள் பிக் பாஸ் சீசன் 5வை கிளுகிளுப்பாக்கியது. பாவ்னியை விரும்புவதாக அமீர் நேரடியாக சொன்ன போதிலும் அவரை அலைக்கழித்தார் பாவ்னி. தன்னுடைய காதலை எந்த இடத்திலும் பாவ்னி வெளிப்படுத்தவில்லை.

தீனியான காதல் விவகாரம்

தீனியான காதல் விவகாரம்

ஆயினும் இவர்களது காதல் விவகாரம்தான் நெட்டீசன்களுக்கு தீனியாக அமைந்தது. Pavmirxcreations என்று இவர்கள் பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கமே இருக்கிறது. இருவரும் இணைந்திருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் அதில் பதிவிடப்பட்டு வருகிறது. ஆயினும் இந்த விஷயத்தில் பாவ்னி பிடிக் கொடுக்காமலேயே உள்ளார்.

 பாவ்னி விளக்கம்

பாவ்னி விளக்கம்

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமீர் தனக்கு சிறந்த நண்பர் என்றும் தங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் காதல் கதை விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாவ்னியின் பதில் ரசிகர்களுக்கு புஸ்ஸென்றாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X