மீண்டும் பெற நினைக்கிறேன்.. பாவ்னி பேச்சால் மீண்டும் குழப்பத்தில் அமீர்!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடியாக மாறியுள்ளது அமீர் -பாவ்னி.

இவர்கள் அந்த சீசனில் டைட்டிலை வெற்றிப் பெறவில்லை என்ற போதிலும் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தனர்.

தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் டைட்டிலை வெற்றிக் கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்மூலம் இதன் போட்டியாளர்கள் பலர் அதிகமான அங்கீகாரத்தை பெற்று பெரிய திரையிலும் ஜொலித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அதிகமான நாட்கள் காத்திருந்த நிலையில் இன்னும் இரு தினங்களில் நிகழ்ச்சியின் சீசன் 6 துவங்கவுள்ளது அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அமீர் -பாவ்னி ஜோடி

அமீர் -பாவ்னி ஜோடி

கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டைட்டிலை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்றபோதிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தனர். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பாவ்னி தனது சோகக்கதையை நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்ட நிலையில், அவரிடம் காதலை பகிர்ந்தார் அமீர்.

 பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

ஆனால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத பாவ்னி, தொடர்ந்து போக்குக் காட்டி வந்தார். இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்ற ரசிகர்களின் கனவை பூர்த்தி செய்யாமலேயே இருந்தார் பாவ்னி. தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தபின்பு அமீரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முதலியவற்றில் கலந்துக் கொண்டாலும் காதலை உறுதி செய்யாமலேயே இருந்தார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2

தொடர்ந்து இந்த ஜோடி பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வெற்றிக் கொண்டது. நடன இயக்குநராக இருந்த அமீரின் நடன அசைவுகள் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாவ்னி அவருக்கு ஈடுகொடுக்கவில்லை என்றபோதிலும் அவரது பர்பார்மென்சையும் சேர்த்து அமீரே ஈடுசெய்தார்.

மீண்டும் குழப்பம்

மீண்டும் குழப்பம்

இந்த ஜோடி டைட்டிலை வெற்றிக் கொண்ட நிலையில், பாவ்னியின் காதலையும் வெற்றிக் கொண்டார் அமீர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாவ்னியின் சமீபத்திய பேட்டி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கையில் மீண்டும் பெற நினைக்கும் விஷயம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

கணவர் திரும்ப வரவேண்டும்

கணவர் திரும்ப வரவேண்டும்

அதற்கு பதிலளித்த பாவ்னி, தனது கணவர் திரும்ப வரவேண்டும் என்றும் அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக அமீரை தனது இரண்டாவது கணவர் என்று புரிந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அமீருடன் தான் தற்போது மகிழ்ச்சியான சூழலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிக்கல்

மீண்டும் சிக்கல்

பாவ்னியின் இந்த பதிலால் அமீர் -பாவ்னியின் உறவு மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளதாக ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் இந்த குழப்பமான சூழலில் இருந்து விரைவில் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X