'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்.. இவங்க நடிப்பது கன்பர்மாம்.. அவரு அய்யப்பன், இவரு கோஷி!
சென்னை: அய்யப்பனும் கோஷியும் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் உறுதியாகியுள்ளது.
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.
மறைந்த இயக்குனர் சச்சி இயக்கி இருந்த இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது.

முன்னாள் ராணுவ வீரர்
பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர். ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா பரவல் தீவிரமடைந்தது.

ஈகோ மோதல் கதை
அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள். அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்கத் தடை இருக்கிறது.

அடிக்கப் பாய்கிறார்
அதை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களுடன் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் வாகன சோதனையில், பிஜூ மேனனிடம் சிக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ். முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்கிறது படம்.

பழங்குடிப் பெண்
இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற பாடல் பட்டி தொட்டிங்கும் ஹிட்டானது. இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியினப் பெண் பாடியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.

தமிழ் ரீமேக்
இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ் ரீமேக்கில் சசிகுமார் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் நடிப்பவர் முடிவாகவில்லை என்று தயாரிப்பாலர் கதிரேசன் கூறியிருந்தார்.

பவன் கல்யாண்
இந்நிலையில் தெலுங்கு ரீமேக் உரிமையை, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதில் பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவும் ராணாவும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது பவன் கல்யாணும் ராணாவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
Recommended Video

சாகர் சந்திரா
பிருத்விராஜ் கேரக்டரில் ராணாவும், பிஜு மேனன் கேரக்டரில் பவன் கல்யாணும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சாகர் சந்திரா படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன், அப்பட்லோ ஒகடுண்டவடு என்ற படத்தை இயக்கி இருந்தார். தமன் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











