பிரியங்கா மோகன் எங்கடா.. பவன் கல்யாணின் ஓஜி க்ளிம்ப்ஸ் ரிலீஸ்.. ரசிகர்கள் வருத்தம்!
சென்னை: ஹங்க்ரி சீட்டா என பெரும் பில்டப் உடன் பவன் கல்யாணின் பிறந்தநாள் பரிசாக ஓஜி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ஆனால், கோலிவுட் ரசிகர்கள் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள தலைவி பிரியங்கா மோகனை எங்கே காணோம் என ரெட்டின் கிங்ஸ்லி ரேஞ்சில் கேட்டு வருகின்றனர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அன்புத் தம்பியும் டோலிவுட் திரையுலகின் பவர் ஸ்டாருமான பவன் கல்யாண் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு வெளியான ப்ரோ திரைப்படம் பெரிதாக ஓடாத நிலையில், அடுத்ததாக ஓஜி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார் பவன் கல்யாண்.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ், இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பவன் கல்யாண் பர்த்டே: டோலிவுட்டின் டாப் ஹீரோ பவன் கல்யாண் 1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 52வது பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓஜி படத்தின் பிளட் பாத் க்ளிம்ப்ஸை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஒரே வெட்டுக்குத்துதான்: முன்னணி ஹீரோக்கள் என்றாலே கையில் வாள் அல்லது துப்பாக்கியை வைத்துக் கொண்டு படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க எதிரிகளை கொன்றாலே படம் சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது என்கிற எண்ணம் அனைத்து ஆக்ஷன் ஹீரோக்கள் மனதிலும் பதிந்து விட்ட நிலையில், அதே வெட்டுக்குத்து கதையுடன் பவன் கல்யாணின் ஓஜி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சியும் தற்போது மிரட்டலாக வெளியாகி உள்ளது.
பிரியங்கா மோகன் எங்கடா: பவன் கல்யாண் படங்கள் கோலிவுட்டில் பெரிதாக பிக்கப் ஆகாத நிலையில், இந்த படத்தின் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில், தலைவி பிரியங்கா மோகனை க்ளிம்ப்ஸில் காட்டலையே என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் அடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 என ஒரு கலக்கு கலக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











