கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த பவன் கல்யாண் ரசிகர்.. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.. சோகத்தில் பவன்

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவிலேயே நடிகர் மட்டும் இல்லாமல், அரசியல்வாதியாகவும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பவன் கல்யாண். அவரை கடவுள் மாதிரி கொண்டாடுற ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர்தான் 17 வயதான நிரஞ்சன். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் கடைசி ஆசை நிறைவேறாமல் அவர் மறைந்தது பவன் கலயாண் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

குழந்தைப் பருவத்தில் ஆரோக்யமாக இருந்த நிரஞ்சனுக்கு, அதற்குப் பிறகு அரிய வகை தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமா மாறி, ஒரு கட்டத்துக்கு பிறகு நடக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், கைகளை கூட சரியா அசைக்க முடியாத நிலை. இருந்தாலும் அந்த சிறுவனுக்கு மனது மட்டும் உடையல. அதுக்கு காரணம் பவன் கல்யாண் மேல இருந்த அன்புதான்.

படுக்கையிலேயே இருந்தபடியே பவன் கல்யாண் பாடல்களுக்கு டான்ஸ் ஆட முயற்சி செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், "இவரோட ஆசையை பவன் கல்யாண் கண்டிப்பா நிறைவேற்றணும்"என்று சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்தனர். அந்த தகவல் இறுதியில் பவன் கல்யாண் கவனத்துக்கும் போய்ச் சேர்ந்தது.

Pawan Kalyan Fan Dies Before Final Wish Came True Emotional Story Leaves Fans Heartbroken

பவன் கல்யாணின் தீவிர ரசிகர்: அதன் பிறகு நடந்தது தான் பலரையும் நெகிழ வைத்த சம்பவம். நேரடியாக நிரஞ்சன் வீட்டுக்கே போய் அவரை சந்தித்தார் பவன் கல்யாண். நீண்ட நேரம் பேசினார். உடல்நிலை பற்றி கேட்டார். தைரியமா இரு... நான் உன்னோட இருக்கேன் என்று ஆறுதல் சொன்னார். திருப்பதி பிரசாதம், கைப்பட எழுதிய வாழ்த்து, குடும்பத்துக்கு நிதியுதவி என முடிந்த உதவிகளையும் செய்தார். இந்த சந்திப்பு தொடர்பான பல தகவல்களும் பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பகிரப்பட்டது.

உடனே நிறைவேறிய ஆசை: அந்த சந்திப்பின்போது நிரஞ்சன் சொன்ன ஒரு சின்ன ஆசை உடனே நிறைவேற்றினார் பவன். அதாவது, "எனக்கு ஒரு நாய்க்குட்டி வளர்க்கணும்"ன்னு சொன்னதும், அதே நாளே நாய்க்குட்டியை வாங்கி அனுப்பி வைத்தார் பவன் கல்யாண். அதுமட்டுமல்ல, "என்னோட அடுத்த பெரிய படம் ரிலீஸ் ஆனதும், நாம ரெண்டு பேரும் சேர்ந்து தியேட்டர்ல பார்க்கலாம். நீ தான் என்னோட ஸ்பெஷல் கெஸ்ட்"ன்னும் வாக்குறுதி கொடுத்திருந்தார் பவன் கல்யாண்.

Pawan Kalyan Fan Dies Before Final Wish Came True Emotional Story Leaves Fans Heartbroken

கடைசி ஆசை: பவன் கல்யாண் சொன்னதும் அந்த நாளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார் நிரஞ்சன். ஆனால், உடல்நிலை திடீர்னு மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரஞ்சன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவன் கல்யாணை நேரில் பார்க்கணும் என்ற ஆசை நிறைவேறினாலும், அவருடன் சேர்ந்து படம் பார்க்கணும் என்ற கடைசி கனவு மட்டும் நிறைவேறவில்லை.

இந்த செய்தி வெளியான பிறகு, பவன் கல்யாண் ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவரும் சந்தித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் மீண்டும் பகிர்ந்து, "அந்த சின்ன பையனோட கடைசி ஆசை நிறைவேறாம போயிடுச்சே" என்று உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் நிரஞ்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X