கிண்டலடித்து படம் எடுப்பதா? ராம் கோபால் வர்மா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்!

By

ஐதராபாத்: பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தை, பவன் கல்யாண் ரசிகர்கள் நேற்று அடித்து உடைத்தனர்.

பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா. ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்.

இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. நடிகர், நடிகைகளில் இருந்து அரசியல்வாதிகள்வரை யாரையும் விட்டு வைப்பதில்லை அவர்.

ஆன்லைன் தியேட்டர்

ஆன்லைன் தியேட்டர்

இந்த லாக்டவுன் நேரத்தில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். கடுமையான விமர்சனங்களையும் வைத்தனர். ஆனால், எதையும் கண்டு கொள்ளவில்லை ராம் கோபால் வர்மா. சத்தம் போடாமல் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

உள்ளாடைகளுடன்

உள்ளாடைகளுடன்

அந்த படத்தின் ஹீரோயின் உள்ளாடைகளுடன் படு பயங்கரமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்திலும் பலான காட்சிகள் பல இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தனது படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்தார் ராம் கோபால் வர்மா. ஒடிசாவை சேர்ந்த ராக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞரும் ஹீரோயினும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆபாசமாக இருப்பதாக

ஆபாசமாக இருப்பதாக

இதையும் ரசிகர்கள் கண்டபடி விளாசினர். அண்மையில் ஒடிசாவை சேர்ந்த தனது ஹீரோயினை புகழ்வதற்காக ஒடிசா மாநிலத்தை குறைத்து மதிபிட்டு டிவிட் செய்திருந்தார். கடுப்பான அம்மாநில ரசிகர்கள், ராம் கோபால் வர்மாவை கண்டப்படி திட்டி இருந்தனர்.
ஒரு காலத்தில் சிறந்த படங்களை இயக்கி வந்த அவர், இப்போது இயக்கும் படங்கள் ஆபாசமாகவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாணை கிண்டலடிக்கும் விதமாக, பவர் ஸ்டார் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் ராம் கோபால் வர்மா. இருவரும் சும்மாவே ஆகாது என்பதால், இந்த படத்தின் அறிவிப்பே தெலுங்கு சினிமாவில் ரணகளத்தை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து பவன் கல்யாணை சாடி வரும், ராம் கோபால் வர்மா, பவர் ஸ்டார் என்ற படத்தில் அவரையும் அவரது அரசியலையும் கடுமையாக கிண்டலடித்துள்ளார் என்று தெரிகிறது.

டிரைலர் லீக் ஆனது

டிரைலர் லீக் ஆனது

இதனால் பவர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதன் டிரைலரை பணம் கட்டினால்தான் பார்க்க முடியும் என்று கூறியிருந்தார் ராம் கோபால் வர்மா. ஆனால், சொன்ன தேதிக்கு சில நாட்களுக்கு முன் அந்த டிரைலர் லீக் ஆனதால், பணத்தைத் திருப்பித் தருவதாக தனது ட்விட்டரில் அவர் அறிவித்தார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

இந்த படம், டோலிவுட் நடிகர் பவன் கல்யாணை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று ராம் கோபால் வர்மா கூறி இருந்தாலும் பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கையையும், அவரைச் சுற்றி உள்ளவர்களுடனான உறவையும் காட்டுவது போலதான் டிரைலர் உள்ளது. இதற்கிடையே, 'நான் நிறைய அச்சுறுத்தல்களைப் பெறுகிறேன். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை, ஏனென்றால் அச்சுறுத்தல்களின் கீழ் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்' என்று ட்விட் செய்திருந்தார்.

அடித்து உடைத்தனர்

அடித்து உடைத்தனர்

இந்நிலையில், பவன் கல்யாண் ரசிகர்கள் சிலர் நேற்று இரவு ராம்கோபால் வர்மா அலுவலகத்துக்குள் திடீரென புகுந்து அடித்து உடைத்தனர். ஜன்னல்கள் மற்றும் மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பவன் கல்யாண் ரசிகர்கள் பற்றி கேள்விபட்டு அலுவலகத்துக்கு வந்த என் ரசிகர்கள் இவர்கள் என்று கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X