twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘வக்கீல் சாப்‘ தொழில்நுட்ப கோளாரால் நிறுத்தம்… திரையரங்கை தும்சம் செய்த பவன் கல்யாண் ரசிகர்கள்!

    |

    சென்னை: பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டால் ரசிகர்கள் திரையரங்கை சூறையாடினர்.

    தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்டப்பார்வை தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.

    அடங்கவே மாட்டீங்களா.மாராப்பை விலக்கி.. கவர்ச்சியாட்டம் போட்ட இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! அடங்கவே மாட்டீங்களா.மாராப்பை விலக்கி.. கவர்ச்சியாட்டம் போட்ட இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    இதில் பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தெலுங்கில் வக்கீல் சாப்

    தெலுங்கில் வக்கீல் சாப்

    இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிங்க்கின் தெலுங்கு ரீமேக்தான் வக்கீல் சாப். இதில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

    படம் நிறுத்தப்பட்டது

    படம் நிறுத்தப்பட்டது

    தெலுங்கான மாநில ஜோகுலம்ப கட்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் வக்கீல் சாப் திரைப்படத்தை காண திருவிழாப்போல ரசிகர்கள் கூடினர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து பவன் கல்யாண் நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், நாயகன் பவன் கல்யாண் வரும் காட்சிக்கு முன்பே தொழில்நுட்ப கோளாரால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    கதவுகளை அடித்து நொறுக்கினர்

    கதவுகளை அடித்து நொறுக்கினர்

    இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகள் , தகவுகளை அடித்து நொறுக்கி தும்சம் செய்தனர். இதனால் திரையரங்கம் போர்க்களம் போல காட்சியளித்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை திரையரங்க நிர்வாகம் வெளியில் அனுப்பி இழுத்து பூட்டியது.

    திரையரங்கம் சின்னபின்னமானது

    திரையரங்கம் சின்னபின்னமானது

    இருப்பினும் ஆவேசம் குறையாத ரசிகர்கள் திரையரங்குக்கு வெளியில் சென்று கற்களை வீசி திரையரங்க ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். பட்டாசுகளையும் கொளுத்தி திரையரங்குக்குள் வீசினர். இதனால் திரையரங்கமே அமளி துமளி ஆனது. பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது திரையரங்க நிர்வாகம் சற்று கூடுதல் கவனத்தோடு திரையரங்குகளை பராமரித்து வைத்திருக்க வேண்டும். ரசிகர்களும் சற்று பொறுதை காத்து இருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.

    English summary
    Pawan Kalyan fans go on rampage in theatre with abruption to vakeel saab screening
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X